Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறும் தன்மையையும் வளர்க்கும் அர்த்தமுள்ள நடைமுறைகள் இன்றி, நிலைத்த சமாதானம் என்பது நிரந்தரமானதாகாது. என்று அமெரிக்காவின் மனித உரிமைப் பேரவைக்கான விஷேட தூதுவர் எய்லீன் சம்பர்வீன் டொனஹோ தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் அமுல் செய்யப்படாத நிலையிலும் ஆணைக்குழுவின் சிபார்சுகளுக்கு அப்பால் பொறுப்புக் கூறும் தன்மை பற்றிய விடயங்களை தீர்ப்பதற்கான நடைமுறைகள் எடுக்கப்படாத நிலையிலும் பேரவை இந்த நியாயமான பிரேரணையை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு எய்லீன் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பொறுப்புக் கூறலையும் நல்லிணக்கத்தை மேம்படுத்தலையும் முன்னிறுத்தி, மனிதவுரிமைப் பேரவையினால் அங்கீகரிக்கப்படுவதற்கான பிரேரணையை சமர்ப்பிப்பதில் அமெரிக்கா மகிழ்ச்சியடை கிறது.

இப் பிரேரணை 40 அனுசரணையாளர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டுள்ளது. பிரேரணையின் பிரதிகள் சிறுசிறு மாற்றங்களுடன் இன்று அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் நீண்டதும் துயர்நிறைந்ததுமான போர் முடிவுற்று மூன்று வருடங்கள் ஆகியுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக எனது அரசாங்கம் இருதரப்பாகவும், ஒத்த கொள்கைகள் கொண்ட நாடுகள் பலவற்றுடன் கூட்டாகவும் இலங்கையரசின் உயர் மட்டத்தினருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தோம்.

இலங்கை மக்களுக்கு ஒரு அமைதியான எதிர்காலத்தை கட்டியெழுப்பும் தேவை பற்றியே பேச்சுக்கள் அமைந்தன. இந்த மூன்று ஆண்டுகள் இலங்கை அரசாங்கம் நிலைத்த நல்லிணக்க நிலையையும் பொறுப்புக்கூறும் தன்மையையும் ஏற்படுத்தும் திட்டங்களை வகுப்பதற்கு போதுமான கால அவகாசமாகும்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் செயன்முறைகள் வழியாக பிரச்சினையின் இரு தரப்புக்களினாலும் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை தீர்த்து வைப்பதற்கு நாம் மிகவும் அண்மித்த ஊக்குவிப்புக்களை வழங்கியிருந்தோம். ஆணைக்குழுவின் அறிக்கைக்காக நாம் எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம்.

சிபார்சுகளை அமுல்செய்வதற்கு வேண்டிய தனது சொந்த செயற்றிட்டங்களை இலங்கை உருவாக்கும் என்று புரிந்துகொண்டிருந்தோம்.

நாம் எமக்கிடையிலான வழிகள் மூலம், ஒத்த கொள்கைகள் கொண்ட அரசுகளின் ஒத்துழைப்புடனும் மனிதவுரிமைகள் உயர் ஆணையாளரின் அலுவலக வளங்களை அனுகூலமாகப் பயன்படுத்தி தீர்வுகளை முன்னெடுக்கும்படி இலங்கைக்கு ஊக்குவிப்பை வழங்கினோம்.

மேலும் போருக்கு பிந்திய சூழ்நிலைகளை வெற்றிகரமாகக் கையாண்டவையான வேறும் உறுப்பு நாடுகளின் பரந்த அனுபவங்களை பயன்படுத்துமாறு இலங்கையை நாம் உற்சாகப்படுத்தி வந்தோம்.

தலைவர் அவர்களே! கௌரவ பேராளர்கள்! தேசிய நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறும் தன்மையையும் வளர்க்கும் அர்த்தமுள்ள நடைமுறைகள் இன்றி நிலைத்த சமாதானம் என்பது நிரந்தரமானதாகாது.

இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்கள் அமுல்செய்யப்படாத நிலையிலும், ஆணைக்குழுவின் சிபார்களுக்கு அப்பால் பொறுப்புக்கூறும் தன்மை பற்றிய விடயங்களை தீர்ப்பதற்கான நடைமுறைகள் எடுக்கப்படாத நிலையிலும் ஐ.நா.வின் மனிதவுரிமைப் பேரவை இந்த நியாயமான பிரேரணையை ஏற்றுக் கொள்வது பொருத்தமானது.

இலங்கை அரசு மனிதவுரிமைப் பேரவையுடன் இணங்கிச் செயற்படுமாறு இப் பிரேரணையில் கேட்கப்பட்டுள்ளது. பிரேரணை நியாயமானதும் ஆக்கபூர்வமானதும் சூழ்நிலைக்குப் பொருத்தமானதுமாகும். கடந்த 08 ஆம் திகதி நடைபெற்ற முறைசாரா கலந்துரையாடலின் போது இப் பிரேரணைக்கு திருத்தங்கள் கூட முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

இப் பிரேரணையின் நோக்கமானது இலங்கை மக்கள் நிலைத்தும் நியாயமானதுமான சமாதானத்தைப் பெற்று சமத்துவம், கௌரவம், நியாயம், சுயகௌரவத்துடன் வாழ வழிவகுக்க வேண்டுமென்பதேயாகும்.

1 Response to நல்லிணக்கம் பொறுப்புக் கூறும் தன்மையுமின்றி நிலையான சமாதானம் என்பது நிரந்தரமாகாது!

  1. good news for the Tamils.......thanks to USA,US, India,bad news for srilanka
    Tamils going up v.soon in srilanka..........

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com