அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு உள்நாட்டில் பெரும் கண்டனத்தை எழுப்பிய இலங்கை அரசுத் தரப்பினர், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் அத்துமீறி நடந்து கொண்டு, அசிங்கப்பட்டுத் திரும்பி இருக்கிறார்கள்.
ஜெனீவா நகரில், பெப். 27-ம் தேதி தொடங்கிய ஆணையத்தின் 19-வது கூட்டத் தொடர், மார்ச் 23-ம் தேதி முடிவு அடைந்தது.
இதில், இலங்கை அரசுத் தரப்பினர் நடந்து கொண்ட விதம், உலக நாடுகளின் பிரதிநிதி களை முகம் சுளிக்க வைத்தது.
இந்த நிகழ்வுகள் நடந்தபோது நேரில் பார்த்த சாட்சிகளில் ஒருவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன். இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர். அந்த அடிப்படையில் ஜெனீவா சென்ற அவர் நம்மிடம் விவரிக்கிறார்.
இலங்கையில் இருந்து வந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், உயிரைப் பாதுகாக்க வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைப் பத்திரிகையாளர்களும் போர்க்குற்றம் பற்றி உலக நாடுகளின் பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
இவர்கள் எங்கு சென்றாலும் இலங்கை அரசின் நிழற்படை பின்தொடர்ந்தபடியே இருந்தனர். இலங்கை அரசின் குற்றங்களை எடுத்துச்சொன்ன இவர்களை, வெறித்துப் பார்த்தபடி, தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தது ஒரு கும்பல்.
அதுமட்டுமின்றி, செயற்பாட்டாளர்களைப் புகைப்படம் எடுத்தார்கள். இந்தப் படங்களை வைத்து, இலங்கைப் பத்திரிகைகளில், இவர்களைத் தேசத் துரோகிகள் என்று செய்தி வெளியிட்டனர்.
இதற்காகவே, இலங்கையில் இருந்து அரசுத் தரப்பில் 72 பேரை அழைத்து வந்தனர். ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளின் நிகழ்வுகளில் இதுவரை எந்த நாடும் இந்த அளவுக்கு அநாகரிகமாக நடந்து கொண்டது இல்லை.
இலங்கை அரசுத் தரப்பை நியாயப்படுத்துவதற்காக, அவர்கள் தரப்பில் இரு துணை மாநாடுகள் நடத்தப்பட்டன. இரு மாநாடுகளிலும் இலங்கை அரசுக்கு எதிராகப் பல தரப்புகளிலும் கடுமையான கேள்விக்கணைகள்.
'77 முதல் இனக் கலவரங்களைப் பற்றி விசாரித்த ஆணைக் குழுக்களின் அறிக்கைகளை முழுமையாக வெளியிடவும் இல்லை. வெளியிட்டதையும் செயல்படுத்தவும் இல்லை. 87-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட, வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பையும் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் மூலம் ரத்து செய்து விட்டீர்கள். இறுதிப்போர் தொடர்பான நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை எப்படிச் செயல்படுத்துவீர்கள்?’ என்று பல நாடுகளும் கிடுக்கிப்பிடியாகக் கேட்டபோதும், அவர்களிடம் இருந்து முறையான பதில் இல்லை.
ஐ.நா-வில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற சட்ட வல்லுநரான விலி, 'இலங்கையில் சுதந்திரம் வந்து இத்தனை காலம் ஆகியும் ஜனநாயக மாற்றம் கொண்டு வருவதற்கான அடையாளமே தெரியவில்லை. இப்போது மட்டும் எப்படிச் செயல் படுத்துவீர்கள் என்பதைச் சொல்லுங்கள்?’ என்று கேட்டார்.
லண்டனில் இருந்து வந்திருந்த ஒரு மனிதஉரிமை செயற்பாட்டாளர், 'தீர்மானத்தின்படி நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரையைச் செயல்படுத்தாவிட்டால், இலங்கை அரசின் மீது நட வடிக்கை எடுக்க முடியுமா?’ என்று கேட்டார். எந்த கேள்விக்கும் நேரடியான பதில் கிடைக்கவில்லை.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆகிய சர்வதேச மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் இலங்கை அரசுத் தரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது.
'அப்பாவி மக்களை வெள்ளை வானில் கடத்தும் இலங்கை அரசின் குணத்தை ஐ.நா. ஆணையத்திலும் காட்டுகிறீர்களா?’ என்று சர்வதேச மனித உரிமை அமைப்பினர் கடுமையாகக் கண்டித்தனர். இதனால், அங்கு அமளி ஏற்பட்டது.
லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள 'இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள்’ அமைப்பின் சுனந்த தேசப்பிரிய மீது சிங்கள இனவெறியர்கள் தாக்கும் அளவுக்கு நிலைமை படுமோசமானது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை பங்கேற்ற கூட்டத்திலேயே இலங்கை அரசுத் தரப்பினர் எல்லை மீறினார்கள்.
ஐ.நா. பொலிஸ் வந்து, அவர்களைக் கடுமையாக எச்சரித்து, வெளியேற்றினார்கள்'' என்று சொன்னவர், ''ஈழத் தமிழினத்தின் நீதிக்கான போராட்டத்தில் இப்போதைய தீர்மானம், முதல் வெற்றிப்படி'' என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
ஈழத் தமிழினத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதுதானே எல்லாத் தமிழர்களின் எதிர்பார்ப்பும்!
ஐ.நா. பொலிஸாரிடம் வாங்கிக்கட்டிய இலங்கைக் குழுவினர்! அசிங்கப்பட்டுத் திரும்பி இருக்கிறார்கள்!: ஜூனியர் விகடன்
பதிந்தவர்:
Anonymous
28 March 2012
வெளிநாடுகளில் இப்படி அராஜகம் பண்ணும் இந்த இனவெறியர் தம் நாட்டினுள் என்வெல்லாம் அநியாயம் புரிவார்கள் என்பதனை உலகம் புரிந்து கொண்டிருக்கும். சிங்கள இனமே ஒரு அரக்க அட்டூழிய வர்க்கம். ஒன்று இரண்டு விரல் விட்டெண்ணக் கூடியவர்களைத் தவிர. இனியாவது உலகம் புரிந்து கொள்ளுமா இந்தய இனவெறி கொலை வெறியருடன் தமிழர் இணைந்து வாழ முடியாதென்பதனை.