இலங்கைக்கு எதிரான பிரேரணையில் இந்தியா மாற்றங்களைச் செய்ததில் எதுவித பயனும் ஏற்படவில்லை. இறுதியில் தான் நினைத்த இலக்கை அமெரிக்கா அடைந்துவிட்டது என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டினுள் கோதுமை மாவின் நுகர்வை அதிகரிக்கச் செய்வதற்கான ஒப்பந்தத்தை அரச சார்பற்ற அமைப்பொன்று ஏற்றுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குருநாகலை, ஹிம்பாகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
நாட்டினுள் கோதுமை மாவின் நுகர்வை அதிகரிக்கச் செய்வதற்கான ஒப்பந்தத்தை அரச சார்பற்ற நிறுவனம் ஏற்றுள்ளது. இந்த நிறுவனமே நெல் விலையை 40 ரூபாவுக்கு உயர்த்துமாறு கோரி விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டங்களை நடத்துவதற்கு வழிசமைத்துக் கொடுக்கின்றது. ஒரு கிலோ நெல்லுக்கு 40 ரூபாவை கேட்குமாறு விவசாயிகளைத் தூண்டுவதும் அரச சார்பற்ற அமைப்புத்தான்.
அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்ததற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. தாம் இரண்டு மாற்றங்களைச் செய்தோம் என இந்தியா கூறுகின்றது. ஆனால், அந்த மாற்றத்தால் எவ்வித பயனும் ஏற்படவில்லை. தனக்கு என்ன வேண்டுமோ அதனை அமெரிக்கா இறுதியில் அடைந்துவிட்டது என்றார்.
0 Responses to அமெரிக்கா தனது இலக்கை அடைந்துவிட்டது!- விமல்