இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது என நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் ஸ்டோரே தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரஜைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியாது.
போர்க்குற்றச் செயல் தொடர்பில் சுயாதீன விசாரணைக் குழு ஒன்றை நிறுவ வேண்டும் என்றாலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடருமாறு நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கிட்டார்க், விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த போதே அமைச்சர் ஜொனாஸ் ஸ்டோரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை. எனவே இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.
சம்பந்தப்பட்டத் தரப்பினர் ஆயுதம் ஏந்தியதன் காரணமாகவே 13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது: நோர்வே
பதிந்தவர்:
Anonymous
31 March 2012
0 Responses to இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது: நோர்வே