ஐக்கிய நாடுகளின் 19வது மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் அமெரிக்க அரசானது இலங்கை தொடர்பாகக் கொண்டுவந்த வரைவு பிரேரணையும் அதன்பின்னர் கூட்டப்பட்ட மாநாட்டில் பன்நாட்டுப் பிரதிநிதிகளின் கருத்துக்களும் அடிப்படையில் இலங்கை அரசின் படிப்பினைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் மேலும் சில பயன் தரத்தக்க பரிந்துரைகளையும் அடக்கி இருந்தன. இவை அனைத்தையும் நாம் சர்வதேச மட்டத்தில் இலங்கை தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட சிறு மாற்றம் ஒன்றாகவே பார்க்கின்றோம்.
தொடர்ந்து நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 19வது அமர்வின் கூட்டத் தொடரில் மனித உரிமை அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளின் ஆதரவின் மூலம் அமெரிக்க அரசு கொண்டுவந்த பிரேரணையானது அங்கீகரிக்கப்படுவதற்குரிய சந்தர்ப்பம் அதிகம் உண்டு என நம்புகின்றோம்.
அமெரிக்க அரசானது இப்பிரேரணையைக் கொண்டுவந்ததற்காக அமெரிக்க அரசுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த 64 ஆண்டு காலமாக தொடர்ந்து நடாத்தப்பட்டுவரும் தமிழின இனப்படுகொலையும் இன்றுவரையும் நிறுத்தப்படாமல் தமிழினத்திற்கு நடாத்தப்பட்டுவரும் மனிதவுரிமை மீறல்களும் 2009ம் ஆண்டின் பாரிய இனப்படுகொலை மூலம் இழைக்கப்பட்ட பாரிய போர்க்குற்ற மீறல்களும், ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பில் சாவதேச சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு தமிழரின் நீதியானதும் நியாயமானதுமானகோரிக்கையான சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து முளுமையானதொரு அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமென உலகத் தமிழர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் சர்வதேசத்தை வேண்டி நிற்கிறது. கடந்த மார்ச் 5. 2012 திங்கட்கிழமை ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் முன்றலில் நடைபெற்ற மிகப் பாரிய தமிழ் மக்களின் எழுச்சிப் பேரணியும் அதில் வைக்கப்பட்ட கோரிக்கையும் வலுச்சேர்ப்பதாக உள்ளது.
கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 1 866 263 8622 - 416 646 7624
மின்னஞ்சல்: www.ncctcanada.ca
இணையத்தளம்: info@ncctcanada.ca
கனடியத் தமிழர் சுயாதீன சர்வதேச விசாரணைக்குத் தொடர்ந்து வலியுறுத்தல்!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
10 March 2012
0 Responses to கனடியத் தமிழர் சுயாதீன சர்வதேச விசாரணைக்குத் தொடர்ந்து வலியுறுத்தல்!