பாவம், தமிழக அமைச்சர்கள் எல்லாம் சங்கரன்கோவில் பஞ்சாயத்து தலைவர்களாக ஆகிவிட்டார்கள் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.
வரும் மார்ச் 18ஆம் தேதி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் அங்கு முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து பேசிய அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், திராணி இருக்கிறது என்பதை நிரூபிக்கத்தான் தேமுதிக சங்கரன்கோவிலில் போட்டியிடுகிறது.
முதல் அமைச்சருக்கு கோபம் வந்ததுக்கு காரணம், உண்மையை சொல்லப்போனது தான். பாவம் அதிமுக அமைச்சர்கள் எல்லாம் இன்று சங்கரன்கோவில் பஞ்சாயத்து தலைவர்களாக ஆகிவிட்டார்களே என்று நான் பரிதாபப்படுகிறேன் என்றார்.
அதிமுக அமைச்சர்கள் பஞ்சாயத்து தலைவர்களாக ஆகிவிட்டார்கள்: பண்ருட்டி ராமச்சந்திரன்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
10 March 2012
0 Responses to அதிமுக அமைச்சர்கள் பஞ்சாயத்து தலைவர்களாக ஆகிவிட்டார்கள்: பண்ருட்டி ராமச்சந்திரன்