Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 5 ஆம் திகதி தல் 9 ஆம் திகதி வரை நடைபெற்ற 19 ஆவது கூட்டத் தொடரின் நிகழ்வுகளில் இலங்கை விடயம் மிகவும் சூடு பிடித்துள்ளது என அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. ஏறக்குறைய 80 - 90 பேரை தனது பிரசாரத்திற்கென ஈடுபடுத்தியது இலங்கை.

அவுஸ்திரேலியா, சுவீடன், பிரித்தானியா போன்ற நாடுகளிலிருந்து இவர்கள் ஜெனீவா வந்திருந்தனர். எனினும் இவர்களது பிரசாரத்தினால் இதுவரையில் எந்தவித பலனும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

அமெரிக்க வல்லரசு ஒரு சிறிய நாடான இலங்கை விடயத்தில் ஏன் இவ்வளவு மிகக் கடுமையாக உள்ளது என்பது குறித்து இலங்கைத் தீவின் உண்மையான சரித்திரத்தை அறியாத பலர் வியக்கின்றனர்.

கடந்த புதன்கிழமை ஜெனீவா நேரம் நண்பகல் 1.30 மணிக்கு மனித உரிமை சபை தலைவியிடம் அமெரிக்கா இலங்கை குறித்த பிரேரணையைச் சமர்ப்பித்தது. இதனூடாக மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை பற்றிய விவாதத்தை இனி தடுப்பது முடியாத காரியமாகி விட்டது.

கடந்த வியாழக்கிழமை நண்பகல் அமெரிக்க இராஜதந்திரிகளினால் ஐ.நா. மண்டபத்தில் இலங்கை குறித்த தமது நிலைப்பாடு பற்றி விளக்குவதற்காக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக் கூட்டத்தில் பல நாடுகளின் இராஜதந்திரிகள், ஐ.நா நிபுணர்கள், அரச சார்பற்ற பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் என பலரும் பங்குபற்றிக் கொண்டனர்.

இக் கூட்டத்திற்கு அமெரிக்காவின் ஐ.நா. தூதுவர் திருமதி ஈலின் கம்பர்லின் டொனகோ தலைமை தாங்கினார்.

இங்கு பல நாடுகள் உரையாற்றின. இதில் உரையாற்றிய பாகிஸ்தான், எகிப்து, சிம்பாபே போன்ற நாடுகளுக்கு மனித உரிமை சபையில் வாக்குமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்து பேசின என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் உரையாற்றிய வாக்குரிமை உள்ள நாடுகளில் பெரும்பான்மையோர் அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிப்பவர்களாகவே காணப்பட்டனர்.

இக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ், அமெக்க பிரதிநிதிகளிடம் நாம் யாவற்றையும் நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம். தயவுசெய்து நீங்கள் முன்னெடுத்துள்ள பிரேரணையை வாபஸ் பெறுங்களென கேட்டுக் கொண்டார்.

இதேவேளை இக் கூட்டத்தில் பங்கு பற்றிய பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி நாடுகளின் தூதுவர்கள் இப்பிரேரணையை தாம் ஆதரிப்பதாகவும் ஆனால் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளவற்றைக் காலப்போக்கில் நடைமுறைப்படுத்த வேண்டுமென வேண்டிக் கொண்டனர்.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை பல அரச சார்பற்ற நிறுவனங்களினால் ஈமடார் ஆசிய போரம் சர்வதேச மன்னிப்பு சபை ஆகியோரினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் இலங்கையின் பிரபல்யமான மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான திருமதி. நிமல்கா பெர்னாண்டோ திருமதி சுனிலா அபயசேகர அத்துடன் கணனி மூலமாக கொழும்பிலிருந்து பாக்கியசோதி சரவணமுத்து உரையாற்றினர்.

இவ் மூவரும் இலங்கைத்தீவில் சகல பாகங்களிலும் வடக்கு, கிழக்கு உட்பட அங்கு உள்ள மனித உரிமை மீறல்கள் பற்றி கூறியது மட்டுமல்லாது இவற்றிற்கு சர்வதேச சமுதாயத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் முக்கியத்துவம் பற்றியும் கூறினார்கள்.

கடந்த புதன்கிழமை ஐ.நா மண்டபத்தில் நடைபெற்ற இன்னுமொரு கூட்டத்தில் பேதுரு ஜேசுதாசன் வடக்கின் நிலைமைகள் வரைபடங்களுடன் வடக்கில் நடைபெறும் இராணுவ மயப்படுத்தல், புத்த சமயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல் போன்றவற்றை மிக ஆணித்தரமாக விளங்கப்படுத்தியிருந்தார்.

இதே கூட்டத்தில் லண்டனிலிருந்து ஜெனீவா வருகை தந்துள்ள பெண் இலக்கியவாதி முஸ்லிம்கள் பற்றிய கேள்வியொன்று கேட்டு விட்டு பேச்சாளர்கள் பதில் கொடுக்க முன்னர் கூட்டத்தை விட்டு வெளியேறியதையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை 9 ஆம் திகதி ஆபிரிக்கா மனித உரிமை அமைப்பு, அல் ஹக்கீம் அமைப்பு, சர்வதேச நம்பிக்கை அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடந்த கலந்துரையாடலில் பிரான்ஸ், தமிழர் மனிதர் உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் விசுவலிங்கம் கிருபாகரன் கலந்து கொண்டு இலங்கையின் நிலை பற்றி உரையாற்றினார்.

0 Responses to பிரேரணையை வாபஸ் பெறக் கோரி இலங்கைத் தரப்பு அமெரிக்காவுக்கு அழுத்தம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com