மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதனையே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் உத்தேச பிரேரணை வலியுறுத்துவதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜெனீவாக் கிளைப் பணிப்பாளர் Julie de Rivero தெரிவித்துள்ளார்.
மேலோட்டமான தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதனை விடுத்து உண்மையாகவே குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும்.
போர்க்குற்றம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை. விசாரணைகளை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கு நீண்ட கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, சகல விதமான குற்றச்சாட்டுக்களுக்கும் தீர்வுகளை முன்வைக்கத் தவறியுள்ளது.
லலித்குமார் வீரராஜ், குகன் ஆகியோர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை.
சர்வதேச சுயாதீன விசாரணைகளின் மூலம் குற்றச்சாட்டுக்களுக்கு சரியான தீர்வு வழங்கப்பட முடியும் என Rivero குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கும் திட்டம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
0 Responses to போர்க்குற்றம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்