ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கெதிரான தீர்மானத்தை, இந்தியா ஆதரித்தமைக்கான காரணம், இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு நீதி கிடைக்கவே, என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர்கள் கண்ணியமாக வாழ வேண்டும் என்பதற்காகவே ஐ.நா.வில் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தோம். அதேவேளை, இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை.
இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையின் சாதக, பாதக நிலைமைகளை ஆராய்ந்து பார்த்தோம். இதன் அடிப்படையிலேயே இலங்கைக்கெதிரான இந்தத் தீர்மானத்தை நாம் ஆதரித்துள்ளோம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
0 Responses to இலங்கைக்கெதிராக வாக்களித்தது ஏன்?: பிரதமர் விளக்கம்