Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகளின் சபையில் இலங்கையின் போர் குற்றம் குறித்து விவாதம் நடந்தது. இதுகுறித்து அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவு கோரி 22.03.2012 அன்று ஐ. நா.வின் மனித உரிமைகள் குழு சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

47 நாட்டு பிரதிநிதிகள் பங்கெடுத்த இந்த விவாதத்தில் 24 நாடுகள் ஆதரவாக வாக்கு அளித்துள்ளன. இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தனர்.

இந்த விவாதத்தின் போது இந்திய பிரதிநிதி பேசியதாவது:

தமிழர் பகுதியில் புனரமைப்பு பணி செய்ய இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். காணாமல் போனவர்கள், காவலில் உள்ளவர்களை கணக்கெடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித்தருவது, சுகாதாரம் சீர்செய்வது, கண்ணிவெடி அகற்ற முற்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி செய்யும்.

உயர் பாதுகாப்பு மண்டல எண்ணிக்கையை இலங்கை அரசு உடனடியாக குறைக்க வேண்டும். இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு சொந்தமான இடங்களை ஒப்படைக்க வேண்டும். தமிழர்கள் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும் என்றார்.

0 Responses to இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம்: இந்திய பிரதிநிதி பேசியது என்ன?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com