Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுப் பிரிவுகள் பல்வேறு உதவிகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இலங்கை கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த் கரன்னகொடவிற்கு அமெரிக்கா சிறப்பு பயிற்சிகளையும் அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இலங்கையின் அப்போதைய ராணுவத் தளபதி சரத் பொன்சேகா உருவாக்கிய முக்கியப் படைகளில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், விடுதலைப் புலிகளின் கப்பல்கள், ஆயுதக் கப்பல்களின் நடமாட்டம் பற்றிய செயற்கைக் கோள் படங்களை அமெரிக்கா இலங்கை ராணுவத்திற்கு அனுப்பியது. இதுபோன்ற செயற்கைக் கோள் படங்களை புரிந்து கொள்ள இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சியும் அளித்தது.

இலங்கை கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த் கரன்னகொடவிற்கு பேர்ல் துறைமுகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளைத் தடுக்க சிறப்பு பயிற்சிகளை அமெரிக்கா அளித்தது.

அமெரிக்காவின் 7வது கடற் படைப் பிரிவான (7th Fleet) யுஎஸ்எஸ் ப்ளூ ரிட்ஜ் கப்பற் படை (USS Blue Ridge), இலங்கைக்கு பல தொழில்நுட்ப உதவிகளை அளித்தது, விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்பார்வை செய்தது.

விடுதலைப் புலிகளின் கப்பற் படையை முழுவதுமாக தகர்க்க அமெரிக்கா பெரும் உதவி புரிந்தது என்று கூறியுள்ளார்.

இந்த ப்ளூ ரிட்ஜ் படைப் பிரிவு தான் இந்தியா-பாகிஸ்தான் கடல் எல்லைப் பகுதி உள்பட உலகின் 35 நாடுகளைக் கண்காணித்து வரும் மாபெரும் அமெரிக்கக் கடற்படைப் பிரிவாகும். இந்தப் படையில் 60 போர்க் கப்பல்கள், 200 போர் விமானங்கள், 40,000 கடற்படையினர் உள்ளனர்.

வட துருவத்தில் உள்ள குரில் தீவுகளில் தொடங்கி தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா வரை 48 மில்லியன் சதுர மைல் கடல் பகுதியை இந்தப் பிரிவு தான் கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வந்து அமெரிக்கா நிறைவேற்றியதையடுத்து தங்களுக்கு அந்த நாடு செய்த போர் உதவிகளை இலங்கை வெளியே லீக் செய்ய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to விடுதலைப் புலிகளின் கடற்படையை ஒழிக்க இலங்கைக்கு உதவிய அமெரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com