Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுக அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் 32 அமைச்சர்கள் சங்கரன்கோவிலில் முற்றுகையிட்டுள்ளனர் என்று நடிகை குஷ்பு பேசினார்.

வரும் மார்ச் 18ஆம் தேதி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில்,

அதிமுக அரசு பதவியேற்று 10 மாதங்கள் ஆகியும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் திமுகவினரை பழிவாங்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது. சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவித்த நாளில் இருந்தே, அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையே. தமிழக மக்கள் புத்திசாலிகளாச்சே. நாம இதுவரைக்கும் எதுவுமே செய்யவில்லையே என்ற பயம். இதனால் தான் அதிமுக அமைச்சர்கள் 32 பேர் சங்கரன்கோவிலில் முற்றுகையிட்டுள்ளனர்.

0 Responses to அதிமுக அரசுக்கு தோல்வி பயம்: நடிகை குஷ்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com