சசிகலா மீதான கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து அவரது விளக்கத்தை ஏற்றுக் கொள்வதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். எனினும் நடராஜன் மற்றும் திவாகரன் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கையில் மாற்றம் இல்லை என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தவறு செய்த உறவினர்ளுடன் தமக்கு இருந்த உறவைத் துண்டித்து விட்டதாக சசிகலா தான் விடுத்திருந்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சசிகலா அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அதன்பிறகு நடராஜன், ராவணன், திவாகரன் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 28ஆம் திகதி, சசிகலா திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘ஜெயலலிதாவுக்கு கனவிலும் நான் எந்த துரோகமும் நினைக்கவில்லை. அவருக்கு துரோகம் செய்தவர்களுடனான தொடர்பை துண்டித்து விட்டேன்’ என்று கூறியிருந்தார்.
சசிகலா விளக்கத்தை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்வதாக ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். அதே நேரத்தில் நடராஜன், டி.டி.வி.தினகரன், திவாகரன், மகாதேவன், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, ராவணன், தங்கமணி, அடையாறு மோகன், சுந்தரவதனம் உள்ளிட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதையடுத்து, அதிமுக உறுப்பினராக சசிகலா நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி ஆடப்போகிறது வேதாளம் .
கேடாய் முடியும் கூடா நட்பு மீண்டும் சங்கமமாகும் என்பது
எதிர் பார்த்ததுதான். பாவம் தமிழினம்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒட்டுண்ணியாக வாழ்ந்து பழகிவிட்ட
சசிகலாவுக்கு இனிமேல் சுயமாக வாழ முடியாது . ஆளு, அம்பு , சேனை , எடுபிடிகள், என்று
ஒரு குரல் கொடுத்தால், இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு அதிகாரத்தோடு
சகல சுகபோகங்களையும் அனுபவித்த சசிகலா, இப்போது ஒரு காப்பி குடிப்பதாய்
இருந்தால் கூட தானே அதை கலந்து எடுக்கவேண்டிய நிலை . தன்னையும் தன்னுடன்
சேர்ந்த மற்றைய ஒட்டுண்ணிக் கும்பல்களையும் காப்பாற்றுவதற்கு சசிகலா வேஷம் கட்டி
நாடகம் ஆடித்தான் ஆகவேண்டும் . யாரையும் மன்னித்துப் பழக்கம் இல்லாத ஜெயலலிதா
அடிக்கடி சசிகலாவுக்கு மன்னிப்பு வழங்கிக் கொண்டே இருப்பாராம் . ஜெயா- சசியின்
நட்பின் பின்னணியில் இருக்கும் இருட்டுப் பிரதேசங்களின் மீது வெளிச்சம் அடித்துப்
பார்த்தால் தொடர் மன்னிப்பின் மர்மம் துலங்கலாம். தமிழ் மக்களே உங்கள் காதுகளை
தயாராக வைத்திருங்கள் ஜெயலலிதா கூடை கூடையாக பூச்சரத்தோடு வருகிறார்.a