Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈரானின் ஓயிலை இறக்குமதி செய்வது தொடர்பாக உலக நாடுகள் இரு வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த முரண்பாட்டுக்கு பராக் ஒபாமா இன்று முற்றுப்புள்ளி வைத்தார். தமக்குக் கிடைத்துள்ள பொருளியல் ஆய்வு அறிக்கைகளின்படி ஈரானின் ஓயில் இல்லாமலே உலக வர்த்தகத்தை நடாத்த முடியும். ஆகவே அனைத்து நாடுகளும் ஈரானின் ஓயிலை இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை ஈரான் ஓயில் இல்லாமல் உலகத்தின் வர்த்தகத்தை நடாத்துவது சிரமம் என்ற ஆசிய நாடுகளின் கருத்தையும் அவர் முற்றாக நிராகரித்தார். ஈரானின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதன் மூலம் ஈரானுக்கு எதிரான ஐ.நாவின் தடைக்கு வலு கொடுக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். இந்தியா, இலங்கை, சீனா போன்ற நாடுகள் ஈரானின் மலிவு விலை மசகு எண்ணெயில் தமது காலத்தை ஓட்டி வருகின்றன. அமெரிக்காவின் இந்த உறுதியான நிலைப்பாடு அமெரிக்கா வேண்டுமா? இல்லை ஈரான் வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள் என்ற இடத்திற்கு உலகை தள்ளியுள்ளது. 21ம் நூற்றாண்டு உலகம் இப்படியாக வைத்தால் குடுமி வழித்தால் மொட்டை என்ற அவலமான அரசியலுக்குள் நுழைவது முற்றிலும் எதிர்பாராத வியூகமாகும்.

மேலும் ஈரானின் ஒயிலை நிறுத்தினால் சிறீலங்காவின் தேயிலையையும் ஏற்றுமதி செய்ய முடியாது. சிறீலங்காவின் பிரதான தேயிலை இறக்குமதி நாடான ஈரானை அமெரிக்காவுக்காக சிறீலங்கா இழக்குமா இதுதான் இப்போதய சிக்கல். போர்க்குற்ற நாடு என்று நேரடியாக பொருளியல் தடை விதிக்காமல் மறைமுகமாக நகர்த்தப்பட்டுள்ள இன்னொரு காய் இதுவாகும்.

இது இவ்விதமிருக்க தெற்கு தாய்லாந்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் ஏழு பேர் பரிதாப மரணமடைந்தனர். அத்தோடு 70 பேர் படுகாயமடைந்தனர். இப்பகுதியில் அதிகாரம் செலுத்த நீண்ட காலமாக முயன்றுவரும் இஸ்லாமிய தீவிரவாத குழு செய்த வேலை இதுவென்று போலீசார் கூறுகிறார்கள். யாலா நகரத்தின் மத்தியில் ஒரு காரிலும், மோட்டார் சைக்கிளிலும் இருந்து இந்தக் குண்டுகள் வெடித்;தன.

மறுபுறம் ஆப்கானின் போலீஸ் காவல் கடவையில் தூக்கத்தில் கிடந்த ஒன்பது போலீஸ் ஊழியர்களை இன்னொரு போலீஸ்காரர் சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றார். இந்த நபர் தலபான் தீவிரவாதி என்று கூறப்பட்டுள்ளது. ஆப்கானை நிர்வகிக்கும் இராணுவம், போலீஸ் இரண்டிற்குள்ளும் எவ்வளவு தலபான்கள் நுழைந்துள்ளனர் என்பதை அறிய முடியவில்லை. மேலை நாட்டு படைகளைத் திருப்பியனுப்பினால் ஆப்கான் இராணுவம் போலீஸ் இரண்டுமே அரசுக்கு எதிராக அந்தர் பல்டியடித்துவிடும் பரிதாப நிலை தெரிகிறது.

பர்மீய இராணுவ ஜிந்தாக்கள் திருந்திவிட்டார்கள், அவர்கள் பொதுத் தேர்தலை நடாத்துகிறார்கள் என்று மேலை நாடுகள் அறிவித்து வருகின்றன. ஆனால் அங்கு நடைபெறும் தேர்தல் முற்றிலும் முறை கேடானது என்று ஆங் சாங் சுகி அம்மையார் தொவித்துள்ளார். அம்மையார் வெளியில் வந்து தேர்தலில் குதித்தாலும் மக்கள் அவர் எதிர் பார்த்தது போல அவருக்கு வெற்றியை தரும் நிலையில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. வெளிநாடுகளில் ஆங் சாங் சுகி குறித்து ஏற்படுத்தப்பட்ட மாயை உள்நாட்டில் இல்லை. ஏறத்தாழ அவர் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதை தேர்தலால் நிறுவும் நிலையை இழந்துள்ளதாலேயே இவ்வாறு தெரிவிக்கிறார் என்றும் கருத இடமுள்ளது.

அலைகள்

1 Response to ஒபாமாவின் அறிவிப்பு சிறீலங்காவிற்கு விழுந்த பெரிய பொருளாதார அடி

  1. Obama has to CHANGE the world order by taming the ROGUE countries mentioned above. May the almighty give him THE necessary COURAGE and WILL.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com