Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் கொலைக்களம், தண்டிக்கப்படாத குற்றங்கள் என்னும் மற்றொரு காணொளியை, சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் எதிர்வரும் 14ம் திகதி வருகின்ற புதன்கிழமை இரவு 10.55 மணிக்கு காட்சிப்படுத்துகின்றது.

புதைகுழிக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகளை உலகறியச் செய்வதோடு அதற்குக் காரணமானவர்களை ஏன் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பும் காணொளியை சனல் 4காட்சிப்படுத்த உள்ளது.

இலங்கையின் கொலைக்களம் காட்சிப்படுத்தப்படும் போது பிரித்தானியாவில் வாழும் பெரும்பாலான மக்கள் அவற்றை பார்வையிடவேண்டும் அதற்காக விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோகப் பரப்புரை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்படும் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பரப்புரையின் ஒர் அங்கமாக நடைபெறவுள்ள இத்துண்டுப்பிரசுர விநியோகம் மத்திய லண்டன் தொடரூந்து நிலையங்கள், மற்றும் மக்கள் செறிவாகக் கூடும் இடங்கள் ஆகியவற்றில் நடைபெற்ற உள்ளது.

எமது மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளை வெளிக்கொண்டுவரும் சனல் 4 நிறுவனத்திற்கு தமிழர்கள் நன்றி உடையவர்களாக இருக்கின்றார்கள். உண்மையை உலகிற்கு இடித்துரைக்கும் சனல் 4 அண்மைக்காலமாக பல விருதுகளைப் பெற்றுவருவது பெருமிதத்துக்குரியது.

இக் காணொளியை பார்க்க அனைவரையும் ஆர்வப்படுத்துவதோடு, பிரித்தானிய அரச இணையத்தில் பதியப்பட்டுள்ள மின் விண்ணப்பத்தில் கைச்சாத்திடுமாறு அனைவரையும் அறிவுறுத்த வேண்டும்.

இந்த காணொளியை பார்வையிடுமாறு நாம் அனைவரும் எமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுப்பதோடு அதனை பிரித்தானிய பிரதமரும் பார்க்க ஆர்வப்படுத்துமாறு அவர்களை கேட்க வேண்டும் அதற்கான பொறிமுறை இணைக்கப்பட்டுள்ளது. (http://iiicampaign.com/welcome/request-mp)

பிரித்தானிய தமிழர் பேரவை

0 Responses to இலங்கையின் கொலைக்களம், தண்டிக்கப்படாத குற்றங்கள் காணொளிக்கான பரப்புரை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com