ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை ஜெனிவாவில் இந்த தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அனைத்து பொது நிகழச்சிகளையும் கடந்த வியாழக்கிழமை ரத்துச் செய்திருந்தார்.
பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை ஆரம்பமான அனைத்துலக துறைமுக கழக்கத்தின், ஆசிய- ஓசியானியா பிராந்திய 12வது மாநாட்டை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றுமுன்தினம் காலை 10 மணியளவில் தொடக்கி வைத்து உரையாற்றவிருந்தார்.
ஆனால் அவர் அந்த நிகழ்வுக்குச் செல்லவில்லை.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உடல் நலக்குறைவினால் இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை என்று இலங்கை அமைச்சர் ஒருவர், நிகழ்வில் பங்கேற்ற அனைத்துலகப் பிரதிநிதிகளுக்கு அறிவித்தார்.
ஆனால் இலங்கை ஜனாதிபதி உடல்நலக்குறைவினால் பாதிக்கப்படவில்லை என்றும் ஜெனிவா தீர்மானம் குறித்து அறிந்ததும் குழப்பமடைந்த அவர் கண்டியில் உள்ள அதிபர் மாளிகைக்கு ஓய்வெடுக்கச் சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டியில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் அவர் அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டினிஸை சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நேற்றும் இலங்கை ஜனாதிபதி வழக்கமான நிகழ்வுகள் எதிலும் பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவா பிரேரணை! மகிந்த கடும் அதிர்ச்சி! அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து
பதிந்தவர்:
ஈழப்பிரியா
10 March 2012
0 Responses to ஜெனிவா பிரேரணை! மகிந்த கடும் அதிர்ச்சி! அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து