Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தமது விசாரணை அறிக்கையை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் தூதுவர் ஸ்டீபன் ராப் அடுத்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றின் செனட் சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நேரில் விசாரணைகளை நடத்துவதற்காக கடந்த பெப்ரவரி மாதம் ஸ்டீபன் ராப் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் இலங்கை அரசதரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன், முல்லைத்தீவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களையும் அவர் சேகரித்திருந்தார்.

இலங்கை தொடர்பாக, தூதுவர் ஸ்டீபன் ராப் அமெரிக்க செனட் சபைக்கு சமர்ப்பிக்கும் மூன்றாவது அறிக்கை இதுவாகும்.

இந்தப் பயணத்தின் அடிப்படையிலேயே அவர் செனெட் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to இலங்கை போர்க்குற்றங்கள்! விரைவில் அமெரிக்க செனட் சபையில் அறிக்கை சமர்ப்பிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com