அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எனவும், அரசியல் தீர்வுத் திட்டத்தை எட்டும் நோக்கில் அரசாங்கத்துடன் மீளவும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறித்துள்ளது.
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் கடந்த ஜனவரி மாதத்தில் இடைநிறுத்தப்பட்டது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது தொடர்பான சர்ச்சையை அடுத்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டன.
அரசியல் தீர்வுத் திட்டத்தை எட்ட வேண்டுமாயின் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்துவது அவசியமானது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்!: கூட்டமைப்பு