Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கெயிட்டி நாட்டில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற சாலை விபத்தில் 27 பேர் பரிதாப மரணமடைந்தனர். இவர்களில் 17 பேர் உடனடியாக கருகி மடிந்தனர், மிகுதி பத்துப்பேர் வைத்தியசாலையில் மரணித்ததாக செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்தது. கெயிட்டியின் தலைநகர் போட் அயு பிரின்சிற்கு தெற்குப்புறமாக ஓடும் மோட்டார் சாலையில் 40 பேரை அடைந்தபடி சென்ற பாரவண்டி கவிழ்ந்ததில் இந்த விபத்து நடைபெற்றது. இறந்தவர்கள் போக மற்றயவர்கள் படுகாயமடைந்து, எலும்பு முறிவுகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 2010 ம் ஆண்டு கெயிட்டியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 250.000 பேர் இறந்தது தெரிந்ததே.

இது இவ்விதமிருக்க அமெரிக்காவின் நியூயோர்சியில் டெனிஸ் கென்னீஸ் என்ற 52 வயது நபர் ஒருவருக்கு கடந்த வாரம் 10 செ.மீ நீளமான ஆணி இதயத்தில் ஏறியது. தனது மகனுடன் கூரை போடும் வேலையில் ஈடுபட்டிருந்தவேளை காஸ் மூலம் ஆணியை அடிக்கும் கருவியில் அடுக்கப்பட்டிந்த ஆணிகளில் ஒன்று தவறுதலாக பறந்து இதயத்தை துளைத்தது. உடனடியாக வைத்தியசாலை எடுத்துச் செல்லப்பட்ட நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

மறுபுறம் அமெரிக்காவின் ஒக்கலகாமா நகரத்தில் திடீரென சுற்றி வளைப்பில் ஈடுபட்ட போலீசார் சீரியல் கொலையாளி ஒருவரை கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று ருல்சா என்ற சிறிய நகரத்தில் சுமார் ஐந்து கி.மீ சுற்றளவில் மூன்று பேரைக் கொன்று, மேலும் இரண்டுபேரை படுகாயப்படுத்திய சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரே இவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் கறுப்பினத்தவர் அல்ல ஒரு பிக்அப் வாகனத்தில் சுழன்று ஓடியபடியே சகட்டு மேனிக்கு அப்பாவிகளை சுட்டுத்தள்ளியுள்ளார். இவருடைய சிக்கல் என்ன.. போலீசார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். ருலுசா நகர மக்கள் கடந்த சில தினங்களாக பீதியிலேயே நடமாடினார்கள் இவருடைய கைதுக்குப் பின் சிறிய ஆறுதல் ஏற்பட்டுள்ளதாக நகர மேயர் கூறினார். பிரான்சில் முகமட் மராச் நடாத்திய கொலைகள் போல இதுவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

டென்மார்க் ஸ்ருவர் நகரத்தின் கிம்சிங் பிரதான வழியில் நண்பிகளை சந்தித்துவிட்டு வந்து கொண்டிருந்த 17 வயது யுவதி ஒருவர் திடீரென இரண்டு நபர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். ஒருவர் யுவதியை இறுகப் பற்றியிருக்க மற்றவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது, இதுபோல தொடர்ந்து நடந்துள்ளது. சம்பவம் இன்று அதிகாலை 02.00 மணியளவில் நடந்துள்ளது. இளைஞர்கள் இருவரும் 18 – 20 வயதுடையவர்களாகும், தேடுதல் வேட்டை நடக்கிறது.

அலைகள்

0 Responses to வீதி விபத்தில் 27 பேர் பரிதாப மரணம் ஸ்ரூவரில் பாலியல் பலாத்காரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com