நாட்டின் எந்த ஒரு போர் நடப்பினும் அதன் மிகப் பெரிய ஆபத்தை பத்திரிக்ககையாளர்கள் சந்திக்க நேரிடும், குறிப்பாக சாட்சி இல்லாமல் போர் நடத்திய சிறிலங்காவில் பத்திரிக்கையாளர்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
முதல் 10 நிமிடம் பிற நாடுகளில் நடைபெற்ற போர்களையும் இலங்கையின் போர்குற்ற நிலையையும் இந்த காணொளியில் காணலாம்.
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கெதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அபாயகரமான சூழல் பற்றிய விடயங்களை இந்த காணொளி விவரிக்கின்றது.
வடக்கில் இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் படுகொலை செய்யப்பட்டனர். எனினும் அப்பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
ஊடகவியலாளர்களுக்கு அபாயகரமான பிரதேசமாக இலங்கையின் வடக்குப் பிரதேசம் இருந்தது.
கடந்த மூன்று மற்றும் ஐந்து வருடங்களுக்குள் ராஸபக்ஸ அரசாங்கத்தில் ஊடகங்களுக்கெதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் இலங்கையில் தலைநகரமான கொழும்பில் இடம்பெறும் ஊடக அடக்குமுறை மிகவும் மோசமாக இருந்தது.
இலங்கையின் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மேர்வின் சில்வா, “இது எங்களுடைய நாடு, ஏதேனும் எங்களுக்கு எதிரான கருத்து இருப்பின் அவர்களின் கைகள் மற்றும் கால்கள் வெட்டப்படும்” என்று ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் வெளியிட்டிருந்தமை, குறித்து அதிர்ச்சியடைந்ததாக கண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிகா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பாக இதுவரை இலங்கை அரசாங்கத்தால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை.
அதே போல் இலங்கையில் ஊடகத் துறையில் உள்ளவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அடக்கு முறைக்கு உள்ளாகின்றனர்.
சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட இலங்கையிலுள்ள ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்லை. யுத்த காலத்திலும் இவ்வாறான் அச்சுறுத்தல்களையே ஊடகங்கள் எதிர்நோக்கின.
ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கின்றது. இலங்கையின் கொலைக்களங்கள் இயக்குனர் கொல்லம் மக்கரம் தெரிவிக்கையில், இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை துணிச்சலாக அரசாங்கத்திற்கெதிராக குரல் கொடுத்து வந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டார்.
அது மட்டுமன்றி, அமைச்சர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் சபையில், இலங்கைக்கெதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளை விட இந்த போர் முறையானது இலங்கையில் மிகக் கொடூரமாக கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போர் நடத்திய சிறிலங்காவில் பத்திரிக்கையாளர்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர்
பதிந்தவர்:
தம்பியன்
01 April 2012
0 Responses to போர் நடத்திய சிறிலங்காவில் பத்திரிக்கையாளர்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர்