Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் இலங்கை விஜயம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு விஜயம் செய்வதென முன்னர் நவனீதம்பிள்ளை திட்டமிட்டிருந்தார்.

இலங்கை விஜயத்திற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை, அரசாங்கம் நிராகரித்துள்ளமையே, நவனீதம்பிள்ளையின் விஜயம் இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதிநிதிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் வரையில் தமது விஜயத்தைத் தொடரப் போவதில்லை என நவனீதம்பிள்ளை தீர்மானித்துள்ளார் என குறித்த கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

0 Responses to நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் இடைநிறுத்தம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com