தமிழீழ தேசத்தின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட “உச்சிதனை முகர்ந்தால்’’ முழுநீள திரைப்படம் பிரெஞ்சு மக்களால் திரையிடப்படவுள்ளது.
ஈழத்தில் சிங்கள பேரினவாத அரசினால் தமிழின மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள உயிர்பலி எடுப்பும், இளம் சமுதாயத்தில் திட்டமிட்டு மேற்கொண்ட கருவறுப்பும் பாலியல் வதைகள் பற்றிய உண்மைச்சம்பவங்களை ஓரளவு வெளியுலகிற்க்கு கொண்டு வரும் வகையில் பல்வேறு நெருக்கடிகள், இடர்பாடுகளுக்கு மத்தியில் தமிழின உணர்வாளரும், தயாரிப்பாளருமாகிய மதிப்புக்குரிய புகழேந்தி அவர்களால் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்ட “உச்சிதனை முகர்ந்தால்’’ திரைப்படம் பிரான்சில் திரையிடப்பட்ட போது தமிழினத்தின் உண்மை நிலையை தெரிந்து கொண்டதுடன் மனிதநேயம் கொண்ட பல மக்களையும் உணர்வு கொண்டு எழச்செய்துள்ளதுடன் அதற்கு மேலாகச் சென்று இத்திரைப்படம் அனைத்து பிரெஞ்சு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற மனிதநேய நோக்குடன் எதிர்வரும் 08.04.2012 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 15:45 மணிக்கு திரையிடுவதற்கு பிரெஞ்சு ஆர்வலர்களாலும், மக்களாலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் பல பிரெஞ்சு மக்களையும், ஏனைய நாட்டு மக்களையும் வருகவென் அழைப்பு விடுத்துள்ளனர். இத்திரைப்படத்தினை இதுவரை பார்த்திருக்காத தமிழ் மக்களும் சென்று பார்க்கும் படி "தமிழர் ஒருங்கிணைப்பு குழு – பிரான்சு" பிரான்சு வாழ் தமிழ் மக்களை கேட்டுக்கொள்கின்றது.
இடம்: Cinéma Rutebeuf 16/18 allées Gambetta 92110 Clichy Métro Mairie de Clichy
தொடர்புகளுக்கு: 01 43 58 11 42
“உச்சிதனை முகர்ந்தால்’’ முழுநீள திரைப்படம் பிரெஞ்சு மக்களால் திரையிடப்படவுள்ளது!
பதிந்தவர்:
தம்பியன்
07 April 2012
0 Responses to “உச்சிதனை முகர்ந்தால்’’ முழுநீள திரைப்படம் பிரெஞ்சு மக்களால் திரையிடப்படவுள்ளது!