Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (7ந் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்டம் தே.மு.தி.க. சார்பில், காலை 10 மணி அளவில் திருவண்ணாமலை அண்ணா சாலையில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி விஜயகாந்த் தலைமையில் திருவண்ணாமலை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் 20 நிமிடங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த விஜயகாந்த், ஒரு பக்கம் திரும்பினார்.

அப்போது ஒருவர், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை திடீரென தலை மேல் ஊற்றினார். இதை மேடையில் இருந்து பார்த்த விஜயகாந்த், ஏய்... ஏய்... அப்படியெல்லாம் பண்ணாதப்பா என மைக்கில் குரல் கொடுத்தார்.

அவர் தீப்பெட்டியை எடுக்கும் உரசும் முன், அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.

காவல்துறை தனது கடைமையை செய்கிறது என்று சொல்லிவிட்டு வேக வேகமாக மேடையை விட்டு இறங்கி போய்விட்டார் விஜயகாந்த்.

0 Responses to தீக்குளிக்க முயற்சி! ஏய்... ஏய்... அப்படியெல்லாம் பண்ணாதப்பா! மைக்கில் கத்திய விஜயகாந்த்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com