Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி, மலேசியத் தமிழர்கள் மேற்கொண்ட போராட்டங்களுக்கும், அரசியற் செயற்பாடுகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு, மலேசிய ஆதரவளிக்காது என்ற நிலைப்பாட்டினை, மலேசிய அதிகாரிகள் தெரிவித்திருந்த போது, அதற்கு தங்களது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தி , தொடர்ச்சியான போராட்டங்களையும் அரசியற் செயற்பாடுகளையும் மலேசியத் தமிழர்கள் முன்னெடுத்திருந்தனர்.

ஈழத்தமிழினத்தின் மீது இனவழிப்பினை மேற்கொண்ட சிறிலங்காவுக்கு, மலேசியா அரசு ஆதரவளிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டதோடு, 20 லட்சம் மலேசியத் தமிழர்களின் வாக்குகளை, ஆளும் மலேசிய அரசு இழக்க நேரிடுமெனவும் மலேசியத் தமிழர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில், ஈழத்தமிழர்களுக்கான உலகத் தமிழர்களின் குரலாக, மலேசியத் தமிழர்களின் ஆதரவுக்கரத்துக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நன்றி பாராட்டியுள்ளார்.

மலேசியாவின் செம்பருத்தி ஊடகத்துக்கு வழங்கிய கருத்துப் பகிர்விலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியத் தமிழர்கள் தனித்து, தமிழர்களின் போராட்டமாக அல்லாமல், மலே இன மக்களையும் , மலேசிய சீன இன மக்களையும் ஒன்றிணைத்து மேற்கொண்ட போராட்டத்தினை பாராட்டியதோடு , இத்தகைய உணர்வுபூர்வமான செயற்பாடுகள் ஊடாகவே, சிறிலங்காவுக்கு ஆதரவளிக்காது மலேசியா நடுநிலை வகித்தது என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு கிடைத்த மாபெரும் இராஜதந்திரத் தோல்வி என குறிப்பிட்ட பிரதமர் வி.உருத்திரகுமாரன், சிறிலங்காவுக்கு இது கடைசித் தோல்வியாக இருக்கப் போவத்தில்லை எனவும் அவர் உறுதிபட எடுத்துரைத்தார்.

மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்கா தொடர்பில் ஓரு சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தி, தொடர்ந்து தனது செயற்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 Responses to மலேசியத் தமிழர்களுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் நன்றி தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com