மட்டக்களப்பில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாகக் அமைக்கப்பட்டிருந்த அண்ணல் மகாத்மா காந்தியினதும் (காந்தி சதுக்கம்) மற்றும் சாரணிய தந்தை பேடன் பவலினதும் சிலைகள் இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த இரு சிலைகளினதும் தலைப்பகுதிககே உடைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அங்கு சில பிரதேசங்களில் பதற்றநிலை காணப்படுகின்றது.
இது தொடர்பில் விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிலர் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்றதுடன் இவ்வாறான வன்செயல்களுக்குத் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலங்களாக இலங்கையில் தமிழர் வாழுகின்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கின்ற வரலாற்றுத் தலைவர்களது உருவச்சிலைகள் இனந்தெரியாதோரினால் உடைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் காந்தி சிலை மற்றும் பேடன் பவல் சிலை என்பன உடைக்கப்பட்டதற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தமையின் வெளிப்பாடே இச் சிலை உடைப்பிற்கு காரணம் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய நாட்டிற்கு விடுதலையை அகிம்சை ரீதியான பெற்றுக் கொடுத்த ஒரு மகான் மகாத்மா காந்தி, அதே போன்று சேவை மனப்பாங்கை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமகான் பேடன் பவல் இவர்களில் மகாத்மா காந்தி இந்திய நாட்டையும், பேடன் பவல் ஐரோப்பிய நாட்டையும் சேர்ந்தவர்.
இன்று ஜெனிவா தீர்மானத்தின் பின் இந்தியாவையும், ஐரோப்பிய நாடுகளையும் எதிரியாக நோக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கமும், அதன் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பின்னனியாகவுள்ள ஆயுதக்குழுக்கள் பலவித செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் இவ்விரு சிலையும் உடைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
பொதுவாக இவ்விரு சிலைகளும் மட்டக்களப்பு நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தின் மிக அருகில் உள்ளது. இராணுவ ரோந்துகள் அடிக்கடி இப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அத்தோடு அருகாமையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இச்செயற்பாடானது திட்டமிட்ட ஒரு செயற்பாடாக நடைபெற்றுள்ளது. சிலையை உடைப்பதையும், சிலை தாபிப்பதையும் சிலர் அரசியலாக பாவித்துவரும் ஒரு சில செயற்பாடு இம்மாவட்டத்தில் உருவாகியுள்ள நிலையில் இச்சம்பவம் நடைபெற்றது. மிகவும் வன்மையான கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
இச்செயற்பாட்டை புரிந்தவர்களின் கண்டு பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய கடமை அரசாங்கத்துக்கும், பொலிசாருக்கும் உண்டு என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
புத்தன்கூட இந்தியாவில் பிறந்தவன்தானே, அவன் சிலைகள் சிங்களனுக்கு எதற்கு ?. அதையும் உடைக்கட்டுமே ?. முட்டாபயளுகள்..