உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட இலங்கை குழுவொன்று மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ளார்.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் வாஹீட்டையும் சந்தித்து பேச்சுவார்த்தை உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, இலங்கைக்கு ஆதரவாக மாலைதீவு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவொன்று மாலைதீவிற்கு விஜயம்