Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடகொரிய ஏவுகணை கீழே விழுந்தது

பதிந்தவர்: தம்பியன் 13 April 2012

இன்று அதிகாலை ஏவப்பட்ட வடகொரிய ஏவுகணை இன்று அதிகாலை வடகொரிய நேரம் 07.39 நிமிடத்திற்கு ஏவப்பட்டது. பறப்பெடுத்த ஒரு நிமிடத்தில் தரையில் விழுந்ததாக தென் கொரிய உளவுப்பிரிவு அறிவித்துள்ளது. அதன் பின்னர் தகவல் வெளியிட்ட வடகொரிய செய்திப்பிரிவு ராக்கட் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் இருபது துண்டுகளாக உடைந்து சிதறி தென் கொரிய தலைநகர் சியோலுக்கு 300 கி.மீ மேற்கே கடலில் விழுந்தது.

வடகொரிய தலைவர் கிம் இல் சுங்கின் நூற்றாண்டு ஞாபகார்த்தமாக அனுப்பப்பட்ட ராக்கட் சர்வதேச நாடுகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் எடுக்கப்பட்ட முயற்சியாகும். ராக்கட் கடலில் விழுந்தாலும் வடகொரியாவுக்கு எதிரான சர்வதேச எதிர்ப்பு நிறுத்தப்படாது. ஐ.நா பாதுகாப்பு சபையில் இதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் ஏவுகணைகளை அனுப்பும் பணியில் வடகொரிய தோல்வியடைந்தது சர்வதேச மட்டத்தில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலத்த சந்தேகம் காரணமாக இந்த ராக்கட்டுக்கான எரிபொருளை நிரப்பாமல் வடகொரியா கடைசி நேரம்வரை தாமதித்திருந்தது. சர்வதேச எதிர்ப்பு, திடீர் தாக்குதல் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கிடையில் அந்த நாடு தடுமாறியது. இந்தத் தோல்வி வடகொரிய புதிய தலைவர் கிம் யோங் உங்கின் புதிய தலைமைக்கு கிடைத்த அடியாகும்.

மேலும் வடகொரிய நட்பு நாடுகளான சீனாவும், ரஸ்யாவும் கூட தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தன. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக வடகொரியா நடக்கிறது என்று ரஸ்யா எச்சரித்திருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இரண்டும் ஐ.நா பாதுகாப்புச் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தன. ராக்கட் கீழே விழுந்து முயற்சி தோல்வியடைந்ததுள்ளதால் மற்றய நாடுகள் அமைதியாக இருக்க வேண்டுமென சீனா கேட்டுள்ளது. இந்த ராக்கட் புறப்பட்டதும் அதை வீழ்த்துவதற்கான செயற்பாடுகள் ஏதாவது நடந்ததா என்பதை வடகொரியா இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால் தேசத்தலைவர் ஒருவரின் நினைவு தினத்தையும், விழுந்து வெடிக்கக்கூடிய ஆபத்துள்ள ராக்கட் ஏவுதலையும் தொடர்புபடுத்திய செயல் மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என்ற ஏளனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை டைட்டானிக் தாழ்ந்து போன தினத்தில் பிறந்த வடகொரிய தலைவர் கிம் உல் சுங்கின் நூற்றாண்டும், டைட்டானிக் தாழ்ந்த நூற்றாண்டும் ஒரே தினத்தில் வந்துள்ளது. டைட்டானிக் ஞாபகார்த்தமாக திறீ டி பாரிமாணத்தில் வந்துள்ள டைட்டானிக் திரைப்படமும் தோல்வியடைந்து, வடகொரிய ஏவுகணையும் தோல்வியடைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

0 Responses to வடகொரிய ஏவுகணை கீழே விழுந்தது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com