Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவில் நாளை வியாழன் விடிந்தால் யுத்த நிறுத்தம் வந்துவிட வேண்டும் என்று ஐ.நாவின் முன்னாள் செயலர் கொபி அனான் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஒப்புக் கொண்ட விதிகளுக்கு அமைய நேற்றே யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும், ஆனால் நடைபெறவில்லை. இக்கணம் வரை சிரிய அதிபர் தொடர் படுகொலைகளை நடாத்தியபடியே இருக்கிறார். இதுவே தற்போதைய மிகப்பெரிய துயரம் என்று ஐ.நா பாதுகாப்பு சபைக்கு நேற்று கொபி அனான் கடிதம் எழுதியிருந்தார். இருந்தாலும் இன்று காலை கருத்துரைத்த அவர் இந்த நிமிடம்வரை யுத்த நிறுத்த ஒப்பந்தம் செத்துப் போய்விடவில்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இருந்தாலும் இதுவரை சமாதானத்திற்கான சமிக்ஞைகள் எதையும் சிரிய அதிபர் வெளிப்படுத்தாத நிலையிலேயே விடிந்தால் சமாதானம் என்று அறிவித்துள்ளார் கொபி அனான். நாளை அதிகாலை சூரியனின் கிரகணங்கள் சிரிய மண்ணில் விழும்போது அங்கு வெடிக்கும் மரண வெடிகள் முற்றாக நின்றிருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மற்றய விவகாரங்கள் படிப்படியாக நடைபெறும். கொபி அனான் விரித்திருக்கும் வலையில் சிரிய அதிபர் விழுந்தால் அவருடைய குடும்ப அரசியல் கழுதைப் புலியிடம் அகப்பட்ட காட்டெருமையின் கதையாகும் என்பதைக் கண்டு ரசிக்க உலகம் தயாராகி வருகிறது.

இதை நன்கு உணர்நதுள்ள ரஸ்ய வெளிநாட்டு அமைச்சர் சேர்ஜி லாரோவ் கருத்துரைக்கும்போது, சிரியா முற்றான படை விலத்தலை செய்யாது என்றும், தனது யுத்த நிறுத்தத்தை ஒரு பகுதி மட்டும் செய்து காட்டும் என்று தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர் நாட்டில் இறங்கிய பின்னரே பூரண யுத்த நிறுத்தம் அமலுக்கு வரும் என்று சிரிய வெளிநாட்டு அமைச்சர் வலியட் அல் மவுலம் கூறினார். அதேவேளை சட்ட முரணான ஆயுதக்குழுக்களுக்கு இரகசியமான ஆயுதங்களை வழங்கி நாட்டுக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறது துருக்கி என்று சிரியா குற்றம் சுமத்தியுள்ளது.

இது இவ்விதமிருக்க லிபியாவில் போராளிகளுக்கிடையில் நடைபெறும் மோதல்கள் திசைமாறி ஐ.நாவின் பக்கமாக திரும்பியுள்ளது. பெங்காஸி நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ஐ.நாவின் வாகனத்தின் மீது வீட்டில் செய்யப்பட்ட நாட்டு வெடி வீசப்பட்டது. இந்த அனர்த்தத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை ஆனால் ஐ.நா மீது விழுந்த எரி குண்டு லிபியாவின் அடுத்த அத்தியாயத்திற்கு முகமன் கூறியுள்ளதாக நோக்கர்கள் கூறுகிறார்கள். லிபியாவில் அமைதியை கொண்டுவருவதற்குள்ள பாரிய சிக்கல் பண்பற்ற போராளிக் குழுக்களை பண்படுத்தி மனிதர்களாக மாற்றுவதுதான்.

மறுபுறம் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ள கிரேக்கம் பாராளுமன்ற தேர்தலை நடாத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பாராளுமன்ற அனுமதியைக் கோரும் வாக்கெடுப்பு வரும் மே 6ம் திகதி நடைபெறவுள்ளது. கிரேக்கத்தில் கடுமையான மீதம் பிடித்தல்களை செய்ய வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியமும், சர்வதேச நாணய நிதியமும் வழங்கிய நிபந்தனைகளை ஏற்று பொதுத்துறையில் வரம்புக்கு மீறிய மீதம் பிடித்தல்களை கிரேக்க அரசு செய்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் சினமடைந்துள்ளனர். அதன் காரணமாக ஆட்சியில் முன்னணி வகிக்கும் கொன்ஸ்சவேட்டிவ், நியூ டெமக்கிரட்டி கட்சிகள் பலத்த செல்வாக்கு இழப்புக்களை சந்தித்துள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவருகிறது. இந்த நிலையில் மக்கள் கருத்தை அறிய பொதுத் தேர்தல் வருகிறது. 2009 ல் கிரேக்கத்தில் ஏற்பட்ட பாரிய பொருளாதார சிக்கல்களைத் தொடர்ந்து வரப்போகும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும். கிரேக்கத்தின் சிக்கல்களை பொதுத்தேர்தலால் தீர்க்க முடியாது என்பது தெரிந்ததே. புற்றுநோய்க்கு வைத்தியம் செய்ய மந்திரவாதியிடம் போன கதைபோலவே அமைந்துள்ளது.

மறுபுறம் நாளை வடகொரிய ஏவுகணை நாளை பறப்பெடுக்க உள்ளது. இதற்கான எரிபொருளை நிரப்பும் பணிகள் பொருத்தமான வேளையில் செய்யப்படும் என்று வடகொரியா தெரிவிக்கிறது. பெற்றோல் தாங்கியில் லேசர் தாக்குதல்கள் நடந்தால் ராக்கெட்டே வெடித்து சிதற வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. அமெரிக்க சேலஞ்சர் ராக்கட் பெற்றோல் தாங்கயில் ஏற்பட்ட கசிவால் வெடித்து சிதறியது பழைய கதையாகும். அதேவேளை வடகொரியா கிம் இல் சுங்கின் நூற்றாண்டு நினைவாக ஏவும் இந்த ராக்கெட் அணு குண்டை அனுப்பும் திட்டம் என்று தென் கொரியா சந்தேகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா எத்தனையோ ராக்கட்டுக்களை அனுப்பியுள்ளது, அதில் பல வெடித்து சிதறியுள்ளன. ஆனால் வடகொரியா மிகச் சரியாக ராக்கெட்டுக்களை அனுப்புவது கவனிக்கத்தக்க விடயமாகும்.

0 Responses to விடிந்தால் யுத்த நிறுத்தம் இல்லையேல் விபரீதம் கொபி அனான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com