Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனி மொழி அக்கா களத்தில் வந்தா
கண்ணீர் எல்லாம் போனதென்றார்..
நாலு நாள் சாகக் கிடக்க
நடேசன் எழுதிய மெயிலெல்லாம்
யாழ்ப்பாணத்து மெயில் வண்டியில் வந்த
காலாவதி கடிதங்களென்று கருதினாயக்கா..
குண்டுச் சத்தம் குபீரென எழ..
வண்டு வாணம் போல ஷெல்லடி பறக்க..
நச்சுப் புகையடித்து நம்மவர் மடிய..
குடியிருந்த வீடு சுடுகாடாய் போக..
ஆவீன மழை பொழிய
மனையாள் மேல் பூதம் வந்ததுபோல
மக்களெல்லாம் மலைத்து ஓட
கனிமொழியை நம்பி கடிதம் எழுதி
பதிலுக்கு காத்திருக்கும்
முள்ளிவாய்க்கால் உறவுகள் முடிந்து
மூன்றாண்டு ஆகிவிட்டது அக்கா..
உன் தந்தை போல் வடவனின்
சிறைக்கம்பி பார்த்துவிட்டாய்..
2 ஜியால் இறவாப் புகழ் பெற்றாய்..
கனி எப்படி மொழி பேசும்.. ஒரு நாள்
கனியும் மொழி பேசும் எம்மைக் காக்குமென
எண்ணியது உன் குற்றமல்ல அக்கா..
கனி மொழி பேசாது என்பதை
கண்டு பிடித்து மூன்று வருடங்கள் அக்கா..
உன்னை நம்பிய
கனிமொழிகள் கதறிய சத்தம்
காற்றில் கரைந்ததக்கா..
ஆசை அக்கா
கனி மட்டுமா மொழி பேசாது..
செத்தவரும் பேசார் – என்
செம்மொழி அக்கா..

2 Responses to மே 18 | மறக்க முடியாத மனிதர்கள் | கனிமொழி

  1. without knowing truth dont write poems

     
  2. she talked about mullivaikal killings in parliament,she took efforts in may2008 with jegath kaspar and kp.dont write emotionally .nediyavan meshedup with ltte flag in may2008 meetings with fools like u.thats why every thing collapsed.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com