Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மெக்சிக்கோவில் உள்ள மொன்ரரி நகரத்தில் தலைகள் அரியப்பட்ட 49 சடலங்கள் பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீசப்பட்டிருந்தன.

அமெரிக்க – மெக்சிக்கோ எல்லைக்கு 180 கி.மீ தொலைவில் இவைகளை கண்டெடுத்துள்ளதாக மெக்சிக்கோ போலீசார் தெரிவிக்கிறார்கள்.

மெக்சிக்கோவில் பல்லாயிரம் உயிர்களை காவு கொண்டுவிட்ட போதை வஸ்த்து குழுக்களிடையே நடைபெறும் மோசமான பழிவாங்கல் வேலையின் வெளிப்பாடே இந்தக் கொலைகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஒருவரை ஒருவர் பழி வாங்குவதும் – பின் பழிக்கு பழி வாங்குவதுமாக பழிக்கு பழி – விழிக்கு விழி என்று பயணிக்கும் மிகப்பெரும் மூடர்களாக இவர்கள் செயற்பட்டு வருகிறார்கள்.

எங்காவது ஓரிடத்தில் இதை நிறுத்த முடியமா என்றால் அந்த நச்சுச் சுழர்ச்சிக்கு முடிவே இல்லை என்று டேனிஸ் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மெக்சிக்கோ விஜயம் செய்த பாப்பரசர் இந்தக் கொலைகளை நிறுத்தி சமுதாயத்தில் நிலவும் பழி தீர்க்கும் மனோபாவங்களை அழிக்க வேண்டுமென பகிரங்க வேண்டுதல் விடுத்திருந்தார்.

ஆனாலும் சிறீலங்காவில் நடந்தது போல தப்பான பாதையில் சுழன்றுவிட்ட பழி தீர்த்தல் வக்கிர நாடகம் அதனுடைய கடைசி அந்தத்தை தொட்டே நிற்கும் என்று உணர முடிகிறது.

மறுபுறம்..

மெக்சிக்கோ போதை வஸ்த்து கடத்தல்காரர் போலவே மோசமான கொலைகளை செய்து, சிறுவரை படையில் சேர்த்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த உகண்டா நாட்டு கொடியவன் யோசப் கொனியின் வலது கையான முக்கிய ஜெனரல் மடக்கப்பட்டுள்ளார்.

உகண்டாவில் மோசமான லோட் றெசிடன்ஸ் ஆமி எனப்படும் இந்த நாசகார கும்பலின் மேல்மட்ட ஐந்து ஜெனரல்களில் ஒருவரான கைசர் அக்கலாம் என்பவரே உகண்டா படைகளால் பிடிக்கப்பட்டுள்ளார்.

உகண்டா – மத்திய ஆபிரிக்க குடியரசு எல்லைப் பகுதியில் இவரை மடக்கிப் பிடித்ததாக உகாண்டா இராணுவம் கூறுகிறது.

இவருடைய கைது எல்.ஆர்.ஏ தலைவரான யோசப் கொனியை நெருங்கிவிட்டதையே காட்டுவதாகவும் காலை ஆபிரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

எல்.ஆர்.ஏ ஆமியானது என்று சிறு பிள்ளைகளை கட்டாயமாக படையணியில் சேர்க்க ஆரம்பித்ததோ அன்றே உலகப் பந்தில் இருக்க முடியாது என்ற ஐ.நா கணிப்பிற்குள் சிக்குப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

அலைகள்

0 Responses to தலைகள் தறிக்கப்பட்ட 49 முண்டங்கள் பிளாஸ்டிக் பைகளில்...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com