Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தோனேசியா Tanjungpinang அகதி முகாமில் இரண்டு வருடகாலமாக தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை தற்போது மேற்கொண்டுள்ளனர்.

தமக்கான உரிய தீர்வினை UNHER தன்னார்வு நிறுவனம் தெரிவிக்கும் வரை தாம் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்ள போவதாக, இந்தோனேசியா அகதிமுகாமிலுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது நாளாக தொடர்ந்து தமது உண்ணாவிரதத்தினை மேற்கொண்டவண்ணம் உள்ளனர். தமக்கான விடியலினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழக அரசியல் தலைவர்கள் பெற்று தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களது இந்த அபாயகரமான நிலையினை உணர்த்து, அவர்களுக்கான தீர்வினை பெற்று தரும் படி அவர்கள் கோரிக்கை தமிழ் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Responses to ஈழத் தமிழ் அகதிகள் இந்தோனேசியாவில் உண்ணாவிரதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com