Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வீரத்தோடு நெஞ்சுநிமிர்த்தி நின்ற எமது இனம் எதிரிக்கு அடிபணியாது முள்ளிவாய்க்கால் மண்ணிலே வித்தாகிப் போனது. மூன்று ஆண்டுகள் இதயம் கனக்க நாம் மெல்ல மெல்ல எழுகின்றோம். எம் உறவுகள் சிந்திய இரத்தம் எம் கண்களில் வழிய சிவந்த விழிகளோடு நாம் நியாயம் கேட்கப் புறப்படுவோம்.கொத்துக் கொத்தாய் குண்டுகள்இ செத்து செத்து விழுந்தனர் எம் சொந்தங்கள்.அத்தனையையும் வீசச் செய்தது ஆறேழு நாடுகள்.அவர்கள்தான் இன்று ஆதரிக்க வருகிறார்.



பெற்றவர்கள் முன் பிள்ளைகள் மடிய பிள்ளைகள் கண்முன் பெற்றவர் மடியஇஉற்ற சொந்தங்கள் உதிரத்தில் நனையஇ உயிர் கொண்ட மனிதம் அய்யோ எனக் கதறஇ உண்ணுங்கள் குண்டுச் சிதறல்களை இஉடுத்துங்கள் உங்கள் குருதியையே இஎண்ணுங்கள் உங்கள் இறுதி நாட்களை இஎனச் சிரித்ததே இப்பாழ்புவி அன்று. ஓர் இனத்தின் தேசத்தைஇ வீரஇனத்தின் இருப்பை அழித்தொழித்துவிட்டு மாபெரும் போர்க்குற்றங்களை புரிந்து விட்டு சர்வதேசங்களை நோக்கி மமதையேடு ஆட்சிபுரியும் சிங்கள இனவாத அரசு அதன் இனவழிப்புப் போரிற்கு பதில் கூறும் தருணம் வந்துள்ளது. புதைந்து போனவை எம் உயிர்கள் மட்டுமே. போரில் சென்றவை எம் உடைமை மட்டுமே. சிதைந்து போனவை எம் உடல்கள் மட்டுமே. சீறியெழுந்தது தமிழீழப் பெருந்தீ.

மே 18இன் போர்க்குற்ற நாளில் நாம் பேரெழுச்சி கொள்வோம். எமது பலத்தினையும் எமது வலிகளையும் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த அரசுகளுக்கு உணரவைப்போம். எமது கைகளில் நாம் ஏந்தப்போகும் எம் உறவுகளின் இழப்புகளின் ஒளிப்படங்கள் மீண்டும் இந்த அரசுகளைக் கண்விழிக்கச் செய்யட்டும்.

வென்றாய் தமிழீழம் சங்கே முழங்கென வெற்றி பெறும் வரை வீழாத அலையாய் ஒன்றாய் எம்மினம் மாய்த்த நாளில் ஓங்கி எழுந்திட உறுதியேற்பீர்.


0 Responses to கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் | மீண்டும் முளைக்கும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com