Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெரும் நெருக்கடிக்குள் சிக்குப்பட்டிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க வந்துள்ள ஒரேயொரு மீட்பர் பராக் ஒபாமாவே என்ற கோணத்தில் அமெரிக்க அதிபரின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1930 களில் அமெரிக்கா சந்தித்தது போன்ற பாரதூரமான நெருக்கடியை அமெரிக்க பொருளாதாரம் சந்தித்தபோது அதை மீட்டு சரியான பாதைக்கு திருப்பிய பெருமை பராக் ஒபாமாவை சாரும்.

பராக் ஒபாமாவுக்குக் கிடைத்த பெருந்தொகை தேர்தல் நிதியை ஆதாரமாக வைத்து அவருடைய பிரச்சார வீடியோ களமிறக்கப்பட்டுள்ளது.

பல கோடி டாலர்களை வாத வருத்தமின்றி வாரி இறைக்கப் போகும் பிரச்சாரத்தை நேற்று முன்தினம் அவர் முடுக்கிவிட்டார்.

வெறுமனே தேர்தல் விளம்பரத்திற்கு மட்டும் 25 மில்லியன் டாலர்கள் ( 140 மில்லியன் குறோணர்கள் ) ஒதுக்கப்பட்டுள்ளன.

டென்மார்க்கில் உள்ள அனைத்து கட்சிகளும் கடந்த 2011 பாராளுமன்ற தேர்தலுக்கு செலவிட்ட பணம் பராக் ஒபாமாவின் சாதாரண விளம்பர செலவுக்கு சமமானதாக இருக்கிறது.

ஒபாமாவின் தேர்தல் விளம்பர வீடியோ இப்படிக் கூறுகிறது..

கடந்த 2008 ஒபாமா பதவியேற்றபோது பெரும் பொருளாதார நெருக்கடி.. பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி… அமெரிக்க மக்களின் வீடுகள் கட்டாய ஏலத்தில் விலை போய்க்கொண்டிருந்தன.. இப்படியான அவலமான நிலையில் அவர் பதவியை பொறுப்பேற்றார்.

அவர் பதவிக்கு வந்ததும்..

பாதாளத்தில் வீழ்ந்து கிடந்த அமெரிக்க கார் உற்பத்தி மறுபடியும் புத்துயிர் பெறுகிறது.

ஈராக் போர் முடிவடைந்து படைகள் வெளியேறுகின்றன.. பின்லேடன் கொல்லப்பட்டு போர் வெற்றி கொள்ளப்படுகிறது.

பல புதிய வேலைகள் உருவாக்கப்படுகின்றன..

இத்துடன் முடிந்ததா.. இல்லை… எமது பணிகள் முடியவில்லை.. தொடர்கின்றன.. இதற்கு உங்கள் வாக்குகள் அவசியம் என்று ஒபாமாவின் பிரச்சாரம் கூறுகிறது..

ஆனால்.. இதற்கு பதிலளித்த மிற் றொம்னியின் விளம்பர காணொளி ஒபாமாவை மன்னித்து விடவில்லை.. இத்தனை நாசங்களுக்கும் பக்கத்துணையாக இருந்தவர்தான் பராக் ஒபாமா என்று வாதிடுகிறது.

ஒபாமா ஆட்சியில் இருந்தபோதுதான் பெரும் நெருக்கடிகள் வந்துள்ளன அதற்கு அவரே பொறுப்பு இந்த அவலங்கள் வானத்தில் இருந்து வரவில்லை என்று கூறுகிறது..

ஒபாமா எத்தனை வீரம் பேசினாலும் அவரால் அமெரிக்க வேலையில்லாத் திண்டாட்டத்தை வெற்றி கொள்ள முடியவில்லை.

கடந்த மாதம் 115.000 பேருக்கு புதிதாக வேலைகள் கிடைத்தன இதனால் 8.2 ஆக இருந்த வேலையில்லாத் திண்டாட்டத்தை இவரால் 8.1 வீதமாகவே குறைக்க முடிந்துள்ளது.

உண்மையாகவே அமெரிக்க பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் உள்ளது.

அதை மறைத்து பராக் ஒபாமா காடு – மலை என்று புலம்ப ஆரம்பித்திருப்பது தேர்தில் அவருக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று நோக்கர்கள் கூறுகிறார்கள்.

இதோ பராக் ஒபாமாவின் தேர்தல் விளம்பரப் படம்:



அலைகள்

0 Responses to அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க வந்த மீட்பர் பராக் ஒபாமா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com