புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் முத்துக்குமரன் ஏப்ரல் 1 ந் தேதி கார் விபத்தில் மரணம் அடைந்தார். அப்போது முதல்வர் ஜெயலலிதா, முன்னால் முதல்வர் கலைஞர் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கலும், அனுதாபமும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விபத்தில் இறந்த தோழர் முத்துக்குமரன் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் பேசினார். ஆனால் அதற்கு எந்த பதிலும் அன்று சொல்லவில்லை.
இந்த நிலையில் முத்துக்குமரன் மனைவி சுசிலா விழுப்புரம் நீதிமன்றத்தில் எழுத்தராக இருக்கிறார். அவருக்கும் பணி இட மாறுதல் கொடுக்க வேண்டும்.
அல்லது புதுக்கோட்டைக்கே பணி மாற்றல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தது. இந்த இரு கோரிக்கைகளுக்கும் அரசு சார்பில் எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை.
ஆனால் கடந்த வாரத்தில், இடைத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும் முதலமைச்சர் ஜெயலலிதா புதுப்பட்டி கிராமத்தில் ஹெலிகாப்டரில் இறங்கி அங்கிருந்து முத்துக்குரனின் சொந்த ஊரான நெடுவாசல் சென்று அவரது மனைவி, குழந்தைகளுக்கு ஆருதல் சொல்லி விபத்து நிவாரணமும், பணிமாறுதல் ஆணையும் கொடுக்க உள்ளார் என்ற செய்தி பரவியது.
ஆனால் ஹெலிக்காப்டர் இறங்கும் இடத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலைகள் மட்டும் பளபளக்க போடப்பட்டு சாலையின் நடுவில் வெள்ளை கோடுகள் போடப்படுவதுடன் ஜெ செல்லும் சாலை ஓரங்களில் உள்ள பயணிகள் நிழற்குடைகளுக்கும் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
புதுப்பட்டியிலிருந்து கறம்பக்குடி, திருமணஞ்சேரி, கருக்காகுறிச்சி வழியாகத் தான் முத்துக்குமரனின் சொந்த ஊரான நெடுவாசல் செல்ல வேண்டும். அந்த சாலைகள் பள்ளம் படுகுழிகளாகத் தான் உள்ளது. அதனால் ஜெ நெடுவாசல் வருகை இல்லை என்றும், முத்துக்குமரன் குடும்பத்தினரை சந்திக்கப்போவதில்லை என்று கூறுகின்றனர்.
செம்பருத்தி
புதுக்கோட்டை பிரச்சாரம் : முத்துக்குமரன் வீட்டிற்கு ஜெ., செல்வாரா?
பதிந்தவர்:
ஈழப்பிரியா
26 May 2012
0 Responses to புதுக்கோட்டை பிரச்சாரம் : முத்துக்குமரன் வீட்டிற்கு ஜெ., செல்வாரா?