கேரள அரசு குட்கா, பான்பராக் போன்ற போதை பாக்குகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. போதை பொருட்களில் இருந்து மக்களை காக்கும் நோக்குடன் கேரள அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.
தமிழ்நாட்டில் போதை பாக்குகள் மற்றும் பிற புகையிலை பொருட்களின் விற்பனை அதிகரித்திருப்பதாக சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையின் புகையிலை கட்டுபாட்டு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை உலக வயதுவந்தோர் புகையிலை பயன்பாட்டு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் 20.6 கோடி பேர் மெல்லக்கூடிய புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும், அவர்களில் 40 விழுக்காட்டினர் இதனால் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 400 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட், போதை பாக்கு போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கபட்டுள்ள போதிலும், தமிழ்நாட்டில் இந்த தடை முழுமையாக கடைபிடிக்கப்படாததால் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் புகையிலை பொருட்களின் பழக்கத்திற்கு ஆளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உயிரிழப்பும் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே புகையிலை பொருட்கள்தான். தமிழ்நாட்டில் போதை பாக்குகளையும் பிற புகையிலை பொருட்களையும் தடை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. புகையிலை தமிழக முதலமைச்சர், புகையிலை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க தமிழ்நாட்டில் போதை பாக்குகளுக்கும், புகையிலை பொருட்களுக்கும் உடனடியாக தடை விதிக்க வேண்டும். இதற்காக தமிழக காவல்துறையில் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
0 Responses to புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்