இங்கிலாந்து மகாராணியார் எலிசபெத்தின் விருந்தினராக பிரித்தானியாவுக்கு வருகை தரவுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான போராட்டமொன்று பிரான்ஸ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிசில் உள்ள பிரித்தானிய தூதரகத்தினை அண்டி அமைதியான முறையில் இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
துண்டுப்பிரசுரங்கள் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டதோடு பிரித்தானிய தூதரகத்திடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.
இந்த மனுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் பிரதிநிதி மகிந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமைதாங்கி கையளித்தார்.
இதேவேளை பிரித்தானியாவுக்கு வருகை தரவுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் தலைநகர் லண்டனில் இடம்பெற இருப்பதோடு இன்னும் பல நாடுகளிலும் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்தவின் வருகைக்கு எதிரான போராட்டம்! பிரான்ஸ் தமிழ் இளையோர்களால் முன்னெடுப்பு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
26 May 2012
0 Responses to மகிந்தவின் வருகைக்கு எதிரான போராட்டம்! பிரான்ஸ் தமிழ் இளையோர்களால் முன்னெடுப்பு