முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே. இம்மானுவல் ஆகியோர், இந்நினைவேந்தல் நிகழ்வில் கூட்டாக பங்கெடுத்திருந்தனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவேந்தி ஆற்றப்பட்ட உரைகளில் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தி நின்றனர். தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னரான ஈழத்தமிழர்களின் அரசியல் குறித்து கருத்துப்பரிதமாற்றம் இடம்பெற்றிருந்தது.
United States Tamil Political Action Council அமைப்பின் தலைவர் கலாநிதி எலியஸ் ஜெயராஜ், San Jose நகரசபை உறுப்பினர் Ash Karla ,அமெரிக்க கொங்கிரஸ் சபை பிரதிநிதி Mike Honda’s ,ருவண்டா மக்களின் பிரதிநிதி Vincent Mugabo, ஆர்மேனிய மக்கள் பிரதிநிதி மற்றும் Amnesty International’s பிரதிநிதிகள் உட்பட மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் பிரிதிநிதிகள் பலரும் இதில் பங்கெடுத்திருந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
25 May 2012
0 Responses to அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு