Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறிலங்காவுடன் அதி உயர்மட்ட இருதரப்புச் சந்திப்புகளை நடத்துவதில் இந்தியா பாராமுகமாக இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஆண்டில் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்புகள் புதுடெல்லியிலோ அல்லது அந்தந்த நாட்டின் தலைநகரங்களிலோ இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானுடன் அதிகாரபூர்வ இருதரப்பு பேச்சுக்களை அவர் நடத்தவி்ல்லை.

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கடந்த ஏப்ரல் மாதம் புதுடெல்லியில் மன்மோகன்சிங்கை சந்தித்திருந்தார். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவரை பாகிஸ்தான் அதிபர் சந்தித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

மியான்மருக்கான பயணத்துக்கு முன்னர், கடந்த 2011 நவம்பரில் மாலைதீவுக்கும், 2011 செப்ரெம்பரில் பங்களாதேசுக்கும் மன்மோகன்சிங் சென்றிருந்தார்.

அத்துடன் நேபாளப் பிரதமர், பூட்டான் மன்னர், ஆப்கானிஸ்தான் அதிபர் ஆகியோரை புதுடெல்லியில் கடந்த ஆண்டு ஒக்ரோபரில் அவர் சந்தித்தார். ஆனால் தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள சிறிலங்கா அதிபரை மட்டும் இருதரப்பு பேச்சுக்களுக்காக மன்மோகன்சிங் சந்திக்கவில்லை.

சிறிலங்கா அதிபரை, மன்மோகன்சிங் மாலைதீவில் நடந்த சார்க் மாநாட்டின் போது ஒரு முறையும், ஜ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த போது ஒருமுறையும் சந்தித்திருந்தார்.
இந்தச் சந்திப்புகள் அவசர சந்திப்புகளாகவும் - குறுகியாதாகவும் இருந்தன. இதன்போது எந்த விவகாரம் குறித்தும் விரிவாகப் பேசப்படவில்லை.

இந்திய பிரதமர் கடைசியாக 2008 இல் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதுகூட ஒரு இருதரப்பு சந்திப்புக்கான பயணம் அல்ல. சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கே அவர் அங்கு சென்றார்.

2010 ஜூன் மாதம் சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ச புதுடெல்ல்லி வந்தபோது கடைசியாக இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது.

இந்தியப் பிரதமருடனான இந்தச் சந்திப்பின் போது, அதிகாரப்ப்கிர்வு மர்ரும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்த பல வாக்குறுதிகளை மஹிந்த ராஜபக்ச வழங்கினார்.

இந்த வாக்குறுதிகள் மீண்டும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம் கிருஸ்ணா 2012 ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் சிறிலங்கா சென்று அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்த போதும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜிடமும் வழங்கப்பட்டன.

இவை வெறும் கடதாசிகளில் மட்டுமே இருக்கின்றன. போர் முடிவுக்கு வந்தபின்னர், வடக்கில் உள்ள தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நியாயமான அரசியல் தீர்வு ஒன்றுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்தது.

13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட ஒரு அரசியல் தீர்வை வழங்குவது தொடர்பான வாக்குறுதியை சிறிலங்காவிடம் இருந்து இந்தியா மீண்டும் பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் சிறிலங்காவுக்கு வருமாறூ மகிந்த ராஜபக்ச மன்மோகன்சிங் 2010 ஜூனில் ஏற்றுக்கொண்டிருந்தார்.

ஆனால் அவர் அதன்படி சிறிலங்கா செல்லவில்லை.

இந்தியப்பிரதமர் ஏன் சிறிலங்கா வரவில்லை இதில் என்ன பிரச்சினை என கேட்டதற்கு

இந்திய வெளிவிவகார அமைச்சிடம் தான் கேட்க வேண்டும், நாம் எப்போதும் அவரை வரவேற்கத் தயாராகவே உள்ளோம் என்று கூறியுள்ளார் சிறிலங்காவின் உயரதிகாரி ஒருவர்.

இந்தியப் பிரதமர் மட்டும் சிறிலங்காவில் இருந்து விலகி நிற்கவில்லை, அவரது அமைச்சர்களும் விலகி நிற்கின்றனர்.

2012 ஜனவரியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் பயணத்துக்குப் பின்னர் இதுவரை எந்தவொரு மூத்த அமைச்சரும் அங்கு செல்லவில்லை.

மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜெய்ராம் ரமேஸ் கதிர்காமர் நிலையத்தினால் வரும் ஜூலை மாதம் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலை 11ம் நாள் கொழும்பு செல்லும் அவரது பயணம் குறுகியது.

மகிந்த ராஜபக்ச தற்போது இருதரப்பு சந்திப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளார்.

முன்னதாக அவர் கட்டார், தென்கொரியா, சிங்கப்பூர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ராஜபக்சவிடம் இருந்து விலகிச் செல்லும் மன்மோகன்சிங் அரசு | இந்திய நாளேடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com