அயல் நாட்டில் நடைபெற்ற போர்க்குற்றத்திற்கு துணைபோனதற்கு கிடைத்த பரிசு..
லைபீரியா நாட்டின் முன்னாள் அதிபர் சாள்ஸ் ரெய்லர் போர்க் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு நேற்று அவருக்கு 50 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒல்லாந்தில் உள்ள சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதமன்று வழங்கியிருக்கும் தீர்ப்பு தென்னாசிய வட்டகையில் போர்க்குற்றங்களை நடாத்தியவர்களின் வயிற்றில் கொறக்கா புளியை கரைத்துள்ளது.
சியராலியோன் நாட்டில் நடந்த உள்நாட்டு போரில் மூக்கை நுழைத்து இவர் நடாத்திய குற்றச் செயல்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மானிடப் படுகொலைகளை அயல் நாட்டில் நடாத்துவதற்கு துணைபோன கழிசடை என்ற அவதூறு இவர் மீது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை வழங்கப்பட்டபோது இவர் கண்களை மூடியபடி அதை ஏற்றுக் கொண்டார்.
கடந்த ஏப்ரல் 26ம் திகதி இவர் மீதான 11 குற்றங்கள் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றால் ஊர்ஜிதம் செய்யப்பட்டன.
பயங்கரவாத செயல்கள், அடிமைகள் வர்த்தகம், சியராலியோனில் செயற்பட்ட போராட்டக் குழுவிற்கு ஆதரவு வழங்கியது போன்ற பல குற்றங்கள் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.
இவருடைய ஆதரவு பெற்ற போராளிக் குழுவான றூப் அமைப்பு படுகொலைகள், பாலியல் பலாத்காரம், பாலியல் அடிமைத் தொழில், சிறுவர் படையணி போன்ற அத்தனை பயங்கரவாத செயல்களையும் செய்தபோது இவர் அதற்கு துணை போனார்.
வன்னியில் கடந்த 2009 மே நடைபெற்ற கொடுமைகள் போன்ற அதே குற்றச் செயல்கள் இவர்களாலும் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தீர்ப்பு பின்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளது..
சாள்ஸ் ரெய்லர் குற்றவாளி என்றால் வன்னி போரில் குற்றமிழைத்தவர்கள் மட்டும் சுற்றவாளிகளா.?
பக்கத்து நாட்டில் போர்க் குற்றம் நடைபெற அதற்கு துணை போவதும் போர்க் குற்றமே என்ற உண்மையை உலகிற்கு எடுத்தியம்பியுள்ளதால் வன்னிப் போர்க்குற்ற விசாரணை இந்தியாவுக்கும் விஸ்த்தரிக்கப்பட வழியுள்ளதா..?
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றத்தில் ஈடுபட்டோர் அதற்கு துணைபோன இந்திய உயரதிகாரிகள், ராடர்களை இயக்கியோர், கட்டளை பிறப்பித்தோர் என பலருடைய எதிர்காலத்தை இந்த வழக்கு கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்த வழக்கு சிறிய நம்பிக்கையைத் தந்துள்ளது.
போர்க்குற்றவாளிகள் எப்போது அகப்படுகிறார்களோ அப்போது தண்டிக்கப்படுவர் என்று சட்டம் கூறுகிறது.
இந்த வழக்கு மேலும் பல போர்க்குற்றவாளிகளின் முகங்களை நினைவுத் திரைக்குள் கொண்டு வருகிறது.
அலைகள்
போர்க்குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதிக்கு 50 வருட சிறை அடுத்தது யார்…?
பதிந்தவர்:
தம்பியன்
30 May 2012
மானிடப் படுகொலைகளை அயல் நாட்டில் நடாத்துவதற்கு துணைபோன கழிசடை என்ற அவதூறு........ எமது அயல்நாட்டு கழிசடையும் எம் இன அழிப்பிற்கு துணை போனதே அவர்களையும் விரைவில் நீதியின் முன் கொணரவேண்டும். கையருகில் கொலைவெறியர் கொட்டமடிக்கும் பொது அவர்களை நீதியின் முன் கொண்டுவர என்ன தயக்கம். அடுத்து தண்டனை பெருபவர் தமிழன அழிப்பிற்கு துணைபோனவர்களாக இருக்கட்டும்.