Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உக்ரேன் நாட்டிலும், போலந்திலும் அடுத்த மாதம் ஐரோப்பா கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெறவுள்ளது தெரிந்ததே.

இது குறித்து இன்று ஜேர்மனிய அபிவிருத்தி அமைச்சர் டிக் நீபிள் அதிரடிக் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

ஜேர்மனி உக்ரேனில் நடைபெறப்போகும் உதைபந்தாட்டத்தை பகிஸ்கரிக்க வேண்டுமென பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.

ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கல் இதுபற்றி பேசியிருந்தாலும் இப்போதுதான் உக்ரேனுக்கு எதிரான உத்தியோக பூர்வமான ஜேர்மனியின் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மனிய அமைச்சரின் மேற்கண்ட அறிவிப்பு இன்றைய ஐரோப்பிய காலைச் செய்திகளில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

அத்துடன் பீபா உதைபந்தாட்டக் கழகத்தின் அதிகாரிகள் உத்தியோக பூர்வ விஜயங்களை இனி உக்ரேனுக்குள் நடாத்தக்கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரேனின் அதிபர் தன்னை ஒரு தடவை தோற்கடித்த பெண் அதிபர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி அவரை ஏழு வருடங்கள் சிறையில் தள்ளுவதுவரை முறுகலடைந்துள்ளது.

சிறையில் இருக்கும் யூலியா ரிமோஸ்யெங்கோவின் முள்ளந்தண்டு டிஸ்கஸ் பொலாப்ஸ் என்ற சில்லு விலகல் நோய்க்குள் சிக்குப்பட்டுவிட்டது.

முன்னாள் அதிபர் என்ற மரியாதை இல்லாமல் சிறைக் கொட்டடி காவலன் ஒருவன் இவருடைய வயிற்றில் இடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளான்.

நோயுற்ற இவரை வெளிநாடு சென்று வைத்தியம் செய்ய அனுமதிக்க முடியாது என்று உக்ரேனிய அரசு அறிவித்துள்ளது.

இப்படியாக ஒரு பக்கம் அரசியல் பழிவாங்கல்களை நடாத்திக் கொண்டு மறுபக்கம் ஐரோப்பா கிண்ணத்தையும் உக்ரேனில் நடாத்துவது அர்த்தமற்ற செயல் என்று பல ஐரோப்பிய நாடுகள் கூறிவிட்டன.

தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் அதிபரை சந்திக்க லித்துவேனிய அதிபருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவர் சிறை சென்று யூலியாவை பார்த்த பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு தகவல் கொடுப்பார்.

இவரை விடுதலை செய்யாவிட்டால் உக்ரேன் ஆட்சியாளர் உதைபந்தாட்டத்தை எதிர்பார்த்தபடி நடாத்த முடியாது என்பது தெரிந்ததே.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக இந்த விவகாரம் முறுகலடைந்து வருகிறது.

இது ஒரு பக்கம் நகர :

நேற்று பதவியேற்ற ரஸ்ய அதிபர் வளாடிமிர் புற்றின் தமக்கும் அமெரிக்காவிற்கும் நெருங்கிய உறவு நிலவுவதாக தெரிவித்தார்.

ஆனால்…

புற்றினின் ரஸ்யாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதை இனியும் தம்மால் சகிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஐரோப்பாவில் அமைக்கவுள்ள ஏவுகணைகள் ரஸ்யாவை நோக்கி நிறுத்தப்பட மாட்டாது என்ற வாக்குறுதியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து அமெரிக்கர் தமது நண்பர்களே என்ற கருத்தை புற்றின் முன் வைத்துள்ளமை கவனிக்கத்தக்கது.

அலைகள்

0 Responses to ஐரோப்பா கிண்ணப் போட்டி உக்ரேனில் நடக்கக் கூடாது : எதிர்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com