Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆப்கானில் நிலைகொண்டுள்ள 3300 பிரான்சிய படையினரது எதிர்காலம் என்ன.. இது குறித்த பேச்சுக்களை நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் பிரான்சிய அதிபருடன் நடாத்த இருக்கிறார்.

வரும் 15ம் திகதி பிரான்சிய அதிபர் பொறுப்பை கொலன்ட ஏற்பதற்கு முன்னதாக ஒரு தொகுதி வெளிநாட்டு விவகாரங்களை பேசி முடிக்க இருக்கிறார்.

இதில் முதல் கட்டமாக நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசனுடனான சந்திப்புக்கள் இடம் பெறுகின்றன, எதிர் வரும் 2014 ற்கு பிறகு பிரான்சின் நிலைப்பாடு என்ன.. அறிய ஆவலுடன் போகிறது நேட்டோ.

நேட்டோ படைகளின் எதிர்காலம் குறித்த பேச்சுக்கள் வரும் 20 – 21 மே மாதம் அமெரிக்காவின் சிக்காகோவில் இடம் பெறவுள்ளன.

அதற்கு முன்னதாக பிரான்சின் புதிய அதிபருடன் பேசினாலே மேற்கொண்டு நிகழ்ச்சி நிரலை வகுக்க முடியும் என்பது தெரிந்ததே.

இது இவ்விதமிருக்க..

பதவி விலகி முன்னாள் அதிபராகப் போகும் ஸார்கோஸிக்கு எதிரான வழக்குகள் வேகமாக தயாரிக்பட்டு வருகின்றன.

ஆட்சியில் இருந்த ஐந்தாண்டு காலத்தில் இவர் கடைப்பிடித்த அத்தனை கூடாத ஒழுக்கங்களும் றிஸ்ராட் விசாரணைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

முதலாவதாக 2007 தேர்தலில் அரச உடமைகளை தவறான வழியில் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற சந்தேகம் உள்ளது.

காலஞ்சென்ற லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியிடம் 50 மில்லியன் யூரோவை கையூட்டாக வாங்கியது ஆகியன ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டுள்ளன.

அதேவேளை பெண் பித்தரான இவர் :

முன்னாள் மனைவி வேறொருவரை காதலித்த பின்னரும் தேர்தல் முடியும்வரை விடயத்தை அம்பலத்திற்கு கொண்டுவராது அவரை மனைவிபோல நடிக்க வைத்தார்.

திடீரென மாடல் அழகி ஒருவரை புதிதாக மணமுடித்தார்.

கூடாத ஒழுக்கத்தால் ஆட்சித்தலைவருக்குரிய இலட்சணங்கள் பலதை நிறைவேற்ற தவறினார்.

இவருடைய மகன் தறிகெட்டு நடந்து ஊடகங்களில் இடம் பிடித்தார்.

ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலுடன் உறவைப் பேணி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயக தன்மைகளை குலைத்தார் என்று பல விமர்சனங்கள் உள்ளன.

இவர் மீதான மேலதி நீதிமன்ற விசாரணைகள் நடைபெறுமென இன்றைய லிபரேசன் பத்திரிகை எழுதியுள்ளது.

ஸார்கோஸி இனி வழக்குகளை சந்திக்கும் பருவம் வருகிறது.. முற்பகல் செய்ததற்கான தண்டனைகள் பிற்பகல் வரப்போகின்றன..

அலைகள்

0 Responses to ஸார்கோஸி மீது விசாரணை கொலன்ட | நேட்டோ செயலர் சந்திப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com