புதுக்கோட்டை அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திக் தொண்டமான் நேற்று மதியம் ஆலங்குடி ரோட்டில் உள்ள ஒரு சர்ச் முன்பு நின்று கொண்டு சர்ச்சுக்கு வந்து போகும் மக்களிடம் வாக்கு சேகரிக்க தனது கட்சிகாரர்களுடன் வந்திருந்தார். அப்போது அதே இடத்திற்கு தே.மு.தி.க வேட்பாளர் ஜாகிர் உசேனும் வாக்கு சேகரிக்க வந்தார்.
அந்த நேரத்தில் இரு வேட்பாளர்களும் கைகுலுக்கி கொண்டு வாழ்த்து சொல்லி கொண்டனர். அதன் பிறகு இருவரும் எதிர் எதிர் திசைகளில் நின்ற கொண்டு சர்ச்சிலிருந்து வெளியே வரும் பொதுமக்களிடம் வாக்குகளை கேட்டனர்.
இதையறிந்த சில அ.தி.மு.க வினர், அ.தி.மு.க வை தொடர்ந்து விமர்சனம் செய்யும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கட்சி வேட்பாளருடன் அ.தி.மு.க வேட்பாளர் கை குலுக்கி பேசிக் கொண்டார். எதிர் அணி வேட்பாளருடன் எப்படி பேசலாம் என்று கட்சி தலைமைக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.
இன்னும் வேட்பு மனு கூட தாக்கல் செய்யாத நிலையில் இப்படி ஒரு புகார் சென்றிருப்பது பற்றி அ.தி.மு.க வினர் இந்த பிரச்சணையால் கட்சி தலைமை, வேட்பாளரை மாற்ற கூட செய்யலாம் என்கின்றனர் சிலர். இந்த சந்திப்பில் என்ன தவறு இருக்கிறது என்கின்றனர் சிலர்.
செம்பருத்தி
0 Responses to அதிமுக வேட்பாளருடன் தேமுதிக வேட்பாளர் | ஜெயலலிதாவிடம் புகார்