முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசேட பொது மன்னிப்பின் அடிப்படையில் சரத் பொன்சேகா இன்று மாலை 4.50 அளவில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை நவலோகா வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய சரத் பொன்சேகா, மேல் நீதிமன்றில் செய்திருந்த மேன்முறையீடுகளை சட்டத்தரணிகள் ஊடாக வாபஸ் பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் பலத்த பாதுகாப்பின் மத்தியில் சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்டதும் அவரை வரவேற்பதற்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் வெலிக்கடை சிறைச்சாலையின் முன்னால் திரண்டிருந்தனர்.
விடுதலை செய்யப்பட்ட சரத் பொன்சேகாவை வரவேற்பதற்காக கொழும்பின் பல பகுதிகளிலும் பாரியளவில் மக்கள் அணி திரண்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொன்சேகா விடுதலை செய்யப்பட்ட செய்தி வெளியிடப்பட்டதன் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் பட்டாசு கொளுத்தி மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
2010 பெப்ரவரி 8 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார்