ஆனைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழி அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் ஏ.எச்.64 யுத்த உலங்குவானூர்தி ஒன்று தாக்குதல் நடாத்தும் ராக்கட்டுடன் பறந்து போனது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் மையப்பகுதிக்குள் வீறாப்பாக சிலாவி பறந்தபோது உலங்குவானூர்தியின் கீழ்ப்புறமாக பொருத்தப்பட்டிருந்த சக்திமிக்க வெடிகுண்டுகளை தாங்கிய ராக்கெட் கழன்று பொத்தென கீழே விழுந்துள்ளது.
நல்லவேளையாக இது அங்கிருந்த ஒரு தோட்டப்பகுதியில் விழுந்தது, ஆனால் வெடிக்கவில்லை.
வெடித்தாலும் என்ற அச்சத்தில் சுற்றுப்புறத்தில் இருந்த சுமார் 100 வீடுகளை சேர்ந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இதுவரை சேதங்கள் எதுவும் நடந்ததாக தகவல்கள் இல்லை, மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன.
வெடித்திருந்தால் பாரிய அனர்த்தங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இவ்வளவு பொறுப்பற்ற முறையில் ராக்கட் ஏவுகணை பொருத்திய உலங்கு வானூர்தியை மக்கள் வாழும் இடத்தின் மேலால் பறக்கச் செய்த காரணத்தை படைத்துறை இதுவரை வெளியிடவில்லை.
கழன்று விழக்கூடிய ராக்கட்டை சுமந்து கொண்டு பறக்குமளவுக்கு பொறுப்பற்ற செயலை செய்த படைத்துறை அடக்கி வாசிக்கிறது.
ராக்கட் வெடித்திருந்தால் பயங்கரவாதம் – காடு – மலை என்று மேலைத்தேய செய்திகள் இன்றைய பொழுதையே கூத்தாடி சீரழிந்திருக்கும் என்பது தெரிந்ததே.
இச்சம்பவம் நேற்று புதன் இடம் பெற்றுள்ளது.
அலைகள்
0 Responses to பொத்தென்று தரையில் விழுந்தது அமெரிக்க ராக்கட்