பிரான்சில் யூன் 10 ம் திகதி நடைபெறவுள்ள பாராளமன்ற தேர்தல் மிகவும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன. நடந்து முடிந்த நாட்டின் அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கொள்கையைக் கொண்ட அரசு அகற்றப்பட்டு இடதுசாரிக் கொள்கையைக் கொண்ட சேசலிசக்கட்சி ஆட்சிப்பீடம் எறியுள்ள நிலையில் நடைபெறப்போகும் பாராளமன்றத் தேர்தலும், மிகவும் முக்கியம் வாய்ந்தாகவே எதிர்பார்க்கப்படுகின்றதுடன் இங்கு வாழும் தமிழ் மக்களின் வாக்குகளும் இனிவரும் காலங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகின்றது.
பிரான்சில் வாழும் வெளிநாட்டு மக்களைப் பொறுத்தவரை பல்லின மக்களை அரவணைத்துச்செல்லும் ஒரு கட்சியாக சேசலிசக்கட்சியும், வெளிநாட்டவர்களின் விடயத்தில் மதிப்பளிக்கும் அதே நேரத்தில், இறுக்கமாகவும், அவர்களின் வருகையை கட்டுப்படுத்தும் ஒரு கட்சியாகவும் யுஎம்பி கட்சியாக இருந்து வருகின்றது. ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை பாட்டி சேசலிசு கட்சியானது எதிர்கட்சியாக இருந்து கொண்டு பல்வேறு நலன்களை தமிழ் மக்களுக்கு புரிந்து வந்துள்ளனர்.
குறிப்பாக தாயகத்தில் சுனாமி ஏற்பட்ட நேரத்திலும், 2009 சிங்களத்தின் தமிழின அழிப்பின் உச்சகாலங்களில் மனிதநேயத்தோடு கைகொடுத்ததும், குரல்கொடுத்ததும் யாரும் மறந்து விடமுடியாது. இவர்களின் அழுத்தம் காரணமாக பிரான்சு அரசு தனது வெளிநாட்டமைச்சர் பேனாட் குசுனரையும், பிரித்தானியா வெளிநாட்டமைச்சர் மிலிபிறானட் அவர்களும் சிறீலங்காவுக்கு சென்று நிலைமைகளை கண்டு வந்ததும் தொடர்ச்சியாக பல முன்னெடுப்புகளுக்கு உதவி செய்து கொண்டே இருக்கின்றனர்.
இந்த வகையில் பிரான்சில் எமது மக்களுக்காகவும், எமது அபிலாசைகளைக்கு மதிப்பளித்து உதவி வருகின்றவர்களில் முதன்மையானவராக செவரோன் மாநகர முதல்வர் மதிப்புக்குரிய Stéphane Gatignonஅவர்கள் இருந்து வருகின்ற அதே வேளை நடைபெறப்போகும் பாராளமன்றத்தேர்தலில் TREMBLAY, VILLEPINTE , SEVRANஆகிய பிரதேசங்களில் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்து வந்த காலங்களில் பல்வேறு வகையில் எமக்கு உறுதுணையாக இருந்தவர் ஸ்ரீபன். தனது பதவிக்கு அப்பால் சென்று மனிதநேயத்துடன் எமது இனத்திற்கு உதவிட்டவர். சொல்லப்போனால் 2009 மண்ணில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாட்களில் பிரான்சில் நடைபெற்ற 50 நாட்களுக்கு மேலான போராட்டத்தில் அரைவாசி நாட்களுக்கு மேல் தவறாது கலந்து கொண்டவர். பணிநிமிர்த்தம் சில நாட்கள் கலந்து கொள்ளாவிட்டாலும் தொடர்பு கொண்டு ஆறுதல் தந்தவர்.
அத்துடன் நின்று விடாது பிரான்சுப் பாராளமன்றத்திலும், ஐரோப்பிய பாரளமன்றத்தில் இவருடைய சக உறுப்பினர்களுடாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர். எமது நியாயமான விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதப்போராட்டமாக சிங்கள நாட்டுக்கு துணைபோகின்ற நாடுகள் கூறியபோது சிலர் பின்வாங்கிய போது அதனை மறுதலித்து, இழந்த மண்ணுக்கான உரிமைப்போராட்டமாக கூறிவருவதோடு மட்டுமல்லாது அதற்கு எடுத்துக்காட்டாக தனது பகுதிக்குட்பட்ட பிரதேசத்தில் சிங்கள பேரினவாத அரசினால் இதுவரைகாலமும் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்காகவும், அவர்களின் நினைவாகவும் இரண்டு மரங்களையும், ஒரு நினைவுக்கல்லினையும் நாட்டி அந்த நினைவுக்கல்லும் மரமும் தமிழ் மக்களின் சொத்தாகவும், எந்த ஆட்சி அதிகாரம் வந்தாலும் பராமரிப்பும், அது சம்பந்தமான அனைத்து விடயங்களும் தமிழர்களுக்கே உரியது என சட்டபூர்வமாக எழுத்திக் கொடுத்துள்ளார் என்பவும் இங்கு குறிபிடத்தக்கதாகும்.
பிரான்சில் உள்ள சிறீலங்கா அரசின் தூதரகத்தின் ஊடாக கொடுத்த அழுத்தங்கள், பொய்யான பரப்புரைகளுக்கு இடம் கொடுக்காது nஐனீவா மனிதவுரிமைகள் செயலகத்திற்கு முன்னால் நடைபெற்ற பேரணி ஒன்றுகூடலிலும், கூட்டத்தொருக்கும் சென்று கலந்து கொண்டவர். இன்னும் தனது மாநகரத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வெளிநாட்டவர்களுக்கு உதவிபுரியும் அமைப்பை நிறுவி அதில் தமிழரை பணியமர்த்தி எமது மக்களுக்கு பல்வேறு உதவிப்பணிகளை ஆற்றிவருகின்றவர் முதல்வர் ஸ்ரீபன் அவர்கள்.
இவரும் இவர் சார்ந்த Europe Ecologie Les Verts கட்சியின் அடிப்படை குறிக்கோள்களைக் கொண்ட மனிதகுலத்திற்கு தேவையான சுற்றுச்சூழல் மாசடைதல், பராமரிப்பு, எல்லோருக்கும் சமத்துவமான உரிமை, மக்கள் மயப்படுத்தல் தொழில் ரீதியான முன்னேற்றம் பொருளாதார உதவி போன்றவையோடு இன்னும் இவர் சார்ந்து நிற்கும் ஆட்சியை பிடித்திருக்கு சேசலிசக்கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அக்கட்சியின் கீழ் மூன்று பிரதேசங்களிலும் இவர் போட்டியிடுகின்றார்.
கடந்த 21ம் நாள் மாநகர முதல்வர் அரசியல் முக்கியஸ்தர்களையும், வெளிநாட்டு அமைப்புகளின் பிரதநிதிகளை அழைத்து தனது தேர்தல் விஞ்ஞாபனங்களை தெரியப்படுத்தியிருந்தார். தமிழினம் சார்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களையும், தமிழீழ மக்கள் பேரவை, செவரோன் தமிழ்ச்சங்கத்தினை அழைத்திருந்ததும், பிரதிநிகளும் கலந்து கொண்டிருந்தனர். தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கதைத்த இவர் விசேடமாக தமிழ்மக்களின் பிரச்சனையை தான் உயர் மட்டங்களுக்கு கொண்டு செல்லப்போவதாகவும் அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான முழுமையான செயற்திட்டங்களை தான் பாராளமன்ற உறுப்பினராக வந்தால் அதிகம் செய்வேன் என்றும், வந்திருந்த ஆட்சியாளர்களிடம் தமிழ்மக்களின் பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தியும் வைத்திருந்தார்.அன்று மாலை நடைபெற்ற மாபெரும் ஒன்றுகூடலுக்கும் தமிழர் பிரதிநிதிகள் அழைக்கப்படடிருந்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
அன்பான தமிழீழ மக்களே!
தமிழ் மக்கள் மீது இனம்புரியாததொரு அன்பையும், நட்பையும், பரிந்துணர்வையும், வைத்திருக்கும் ஸரீபன் போன்றோரும் மற்றும் ஏனைய பிரதேசங்களில் எமக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் தேர்தல் போட்டியாளர்களுக்கு எமது நன்றிக்கடனை தெரிவிக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். இவர்கள் போன்றோர் வெற்றியீட்டி தெரிவு செய்யப்படும் போது எமது இனத்தின் பேரவா இன்னும் மூச்சாகி , வீச்சாகி வெற்றியை தேடித்தர வழிசமைக்கும் என்றும் நம்புவோம். அவர்களும் எமக்கு உதவிட வேண்டும் என்று உளமார எண்ணுகின்றார்கள். எனவே எமது வாக்குகளை நாம் இவர்களுக்கு அளிப்பதோடு மட்டுமல்லாது எமக்கு தெரிந்த நண்பர்கள், உறவுகள், தெரிந்தவர்களை வாக்களிக்க செய்ய வேண்டும். இதுவே நாம் இவர்களுக்கு செய்யும் உதவியாகவும், நன்றிக்கடனாகவும் இருக்கும். இதற்கான மேலதிக விளக்கங்களை பெற்றுக்கொள்ள தமிழ்ச்சங்கங்களின் உதவியை நாடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
இதே போன்று சோலலிச கட்சியில் Anulay sous Bois-Bondy பாராளமன்ற தொகுதியில் போட்டியிடும் திரு Daniel Goldberg அவர்களும் எமக்கு பிரான்ஸ் பாராளுமன்றதில் பல முறை குரல் கொடுத்துள்ளார்.இத்துடன் La Courneuve-Blanc Mesnil- Stain தொகுதியில் போட்டியிடும் திருமதி Mary George Buffet அவர்களும் எமது போராட்டத்திற்கும் அதை ஒரு இன அழிப்பு என்று வெளிபடையாக கூறி எமக்காக பல தடவை பிரெஞ்சு அதிபர் வெளிநாட்டு அமைச்சு ஆகியோருக்கு எமது சார்பாக தொடர்ப்பு கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்.இவர்களை பிரெஞ்சு பாராளுமன்றத்தில் பிரதிநிதிதுவப்படுத்துவது எமக்கு முக்கியம்.ஆகவே இந்த தொகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் இவர்களின் வெற்றிக்கு செயல்படுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு
0 Responses to பிரான்சில் பாராளமன்றத் தேர்தலும், தமிழ் மக்களின் நிலைப்பாடும்