Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விக்கிலீக்ஸ் மூலம் உலகத்தின் முக்கிய இரகசியங்கள் பலதை வெளியிட்ட ஸ்ரெபன் விக்கிலீக்ஸ் யூலியன் அஸஞ்சே பிரிட்டனில் இரந்து சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவார் என்று பிரிட்டன் நீதிமன்று சற்று முன் தீர்ப்பளித்துள்ளது.

இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சுவீடன் அரசு இவரை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென தொடர்ந்து கோரி வந்தது.

ஆனால் இவரோ தம்மீது அரசியல் பழிவாங்கலை செய்வதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து வாதாடி வந்துள்ளார்.

ஏழு யூரிகள் இந்த வழக்கில் பங்கேற்றார்கள், இவர்களில் இருவர் மட்டும் திருப்பி அனுப்பப்படுவதை எதிர்த்தார்கள் மற்றய ஐவரும் ஆதரித்தார்கள்.

குற்றம் சுமத்தப்பட்ட யூலியன் அஸஞ்சே இன்று நீதிமன்று வரவில்லை, ஆனால் அவருடைய சட்டத்தரணி வழக்கை மறுபடியும் விசாரிக்க வேண்டுமென்று கேட்டார்.

திருப்பியனுப்பப்படவுள்ள யூலியன் அஸஞ்சே அடுத்த கட்டமாக ஐரோப்பிய மனித உரிமைக் கமிஷனுக்கு தனது வழக்கை மேன்முறையீடு செய்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இவர் அமெரிக்க அரசின் 250.000 ஆவணங்களை உலக மன்றில் அறிமுகம் செய்து அமெரிக்க இரகசியங்களை போட்டுடைத்தவராவார்.

இவர் வெளியிட்ட ஆவணங்கள், காணொளிகள் போன்றவை உலகத் தலைவர்களின் வயிற்றை கலக்கி வந்தது தெரிந்ததே.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இவர் கடந்த 2010 ன் நடுப்பகுதியில் சுவீடன் சென்றபோது இரண்டு சுவீடிஸ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கைது செய்யப்பட்டு பின் விடுதலையான இவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பே தனது எதிர்கால தலைவிதி என்று கருதுகிறார்.

சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்த இவர் சட்ட முரணாக தான் எதையும் செய்யவில்லை என்றும் கூறுகிறார்.

அதேவேளை சுவீடன் ஆசிய – ஆபிரிக்க நாடல்ல இவர் தனது தரப்பு வாதங்களை முன் வைக்க அங்கு வழியிருக்கிறது… ஆனால் இவர் போக மறுப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் பிரிட்டன் நீதிமன்று இந்த அதிரடித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

அலைகள்

0 Responses to விக்கிலீக்ஸ் அதிபர் நாடு கடத்தப்படுவார்..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com