Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜேர்மனியில் வளர்ந்து வரும் அதிருப்தி வரும் 2013 நடைபெறவுள்ள சான்சிலர் தேர்தலில் தனது பதவி நாற்காலியையே முறித்துவிடும் என்ற அச்சம் ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ் நாட்டு ஜெயலலிதா பாணியில் சுற்றுப்புற சூழல் அமைச்சர் நோபேட் றொட்கனை பதவியில் இருந்து சுழற்றி வீசினார்.

இதற்குக் காரணம் :

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜேர்மனியின் நோட்கெயின் – வெஸ்ற்பாளின் மாநில தேர்தலில் அஞ்சலா மேர்க்கல் தலைமையிலான கொன்ஸ்சவேட்டிவ் சி.டி.யு கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டது தெரிந்ததே.

என்றுமில்லதளவுக்கு சுமார் 26 வீதமான வாக்காளர்களை அந்தக் கட்சி இழந்தது மேர்க்கலுக்கு பலத்த சிக்கலையும் கோபத்தையும், தனது பதவியும் பறி போய்விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது.

காரணம் நோட்கெயின் – வெஸ்ற்பாளின் ஜேர்மனியின் அதிகமான வாக்காளர்கள் வாழும் வாக்கு வங்கி கொழுத்த மாநிலமாகும்.

இந்த மாநிலத்தில் தோற்றால் நாடளாவிய வெற்றி சாத்தியமாகாது.

இந்தத் தேர்தலில் சி.டி.யு கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு கட்சியை வழி நாடாத்தி கவிழ்த்துக் கொட்டியவர் வேறு யாருமல்ல பதவி விலத்தப்பட்ட நோபேட் றொட்கனே.

இதுதான் அவருடைய பதவி விலத்தலுக்கான பிரதான காரணமாகும்.

மேலும் :

பிரான்சில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அதிபர் பிரான்சியோ ஒலந்த ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலின் கொன்ஸ்சவேட்டிவ் கொள்கைக்கு முற்றிலும் ஒத்துவராத பொருளாதார கொள்கையை அறிவித்துள்ளார்.

அவருடைய கருத்து மிகவும் சரியானது என்றாலும் பிற்போக்குத் தனமான மேர்க்கலால் அதை விழுங்க முடியவில்லை.

உதாரணம் :

தண்ணீரை ஒரு பேசனில் ஊற்றி இடது பக்கமாக சுழற்றினால் அது இடப்பக்கமாக சுழலும், வலப்பக்கமாக சுழற்றினால் அது வலப்பக்கமாக சுழலும், இதுபோலவே பொருளாதாரமும் நாம் சுற்றும் பக்கத்திலேயே சுழலும்.

மீதம் பிடிக்கிறோம் என்று அதை உட்பக்கமாக சுற்றினால் எதிர் மறையாக சுற்றி கடைசியில் புறப்பட்ட புள்ளிக்கே வந்து நிற்கும்.

இதுபோல மீதம் பிடித்து, எதிர்மறையாக பொருளாதாரத்தை சுழற்றிய முட்டாள்தனமே இன்றைய பொருளாதார பின்னடைவுக்கு காரணம் என்கிறார் பிரான்சிய அதிபர் ஒலந்த.

மீதம் பிடித்தல் என்ற போலியான போர்வையில் ஏழைகளை அழித்து, பெரும் கிளைகளான பணக்காரரை மட்டும் வாழ வைத்துவந்தது ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரம்.

தப்பான செயலால் சறுக்கி விழுந்துள்ள ஐரோப்பிய பொருளாதாரத்தை புதிய பாதையில் திருப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது.

அஞ்சலா மேர்க்கலுக்கு ஏற்றவாறு தாளம்போட்ட வலதுசாரி சார்கோஸி தோல்வியடைந்தது, ஏழைகளுக்கு மலர்ச்சியை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே.

கிழக்கு ஜேர்மனியில் பிறந்தும் ஏழைகள் பக்கம் நிற்கத் தெரியாத அஞ்சலா மேர்க்கலை இந்த அலை அடித்துச் செல்லப்போகிறது என்பதற்கு இன்றைய பதவி நீக்கல் ஓர் எளிமையான உதாரணமாகும்.

அலைகள்

0 Responses to ஜேர்மனி சுற்றுச் சூழல் அமைச்சர் அதிரடியாக பதவி நீக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com