மூன்று வருடங்களின் முன் கைது செய்யப்பட்ட போது சரத் பொன்சேகாவின் பிடரியில் சிங்கள இராணுவம் அடித்ததாக மனோ. கணேசன் தெரிவித்தது தெரிந்ததே. பிடரியில் அடித்தால் உண்டான கலக்கமோ என்னவோ தெரியாது சரத் பொன்சேகா முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். போர்க்குற்றம் இலங்கையில் நடக்கவில்லை என்று கூறிய அவர் மனித உரிமை மீறல் நடந்தாக கூறுகிறார். இவருடைய முரண்பாடான கருத்துக்களில் இதோ ஒன்று :
இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரின் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் தலைமைத் தளபதியான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக போட்டியில் கூறியதாவது;
விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களாக இருப்பின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை விடுதலை செய்யவேண்டும். வெறுமனே அவர்களை காவலில் வைத்திருக்கக் கூடாது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இருக்கின்றன என்பதை நேரடியாகவே ஒப்புக்கொள்கிறேன். அங்கு தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளும் தேவையாக இருக்கின்றது.
போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் குறித்து உண்மையான ஆதாரங்களை யாராவது சமர்ப்பித்தால் அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், வெறுமனே வதந்திகளின் அடிப்படையிலோ அல்லது பக்கசார்பான நிறுவனங்கள் கூறும் அறிக்கைகளின் அடிப்படைகளிலோ இந்த விசாரணைகள் நடத்தப்பட முடியாது. பல்வேறு சமூகங்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்கள் அனைவருக்கும் பலனைத் தரும் வகையில் தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஆயிரக்கணக்கில் மக்கள் அங்கு கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆனால், அங்கு எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படலாம். கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளா? என்பது குறித்து இறுதியில் அறிவது மிகவும் சிரமமாக இருக்கும்.
இருப்பினும் அந்தச் சிரமங்களுக்கு மத்தியில் துல்லியமான மதிப்பீட்டைச் செய்ய முற்பட வேண்டும். அதிகாரப் பகிர்வு என்பது இன ரீதியில் கையாளப்படக்கூடாது. அது அனைத்து இன மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக, இலங்கையின் ஒற்றை ஆட்சி முறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் அவசரப்படக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Responses to சிங்கள இராணுவம் பிடரியில் அடித்ததால் வந்த கலக்கம்