சிரிய சர்வாதிகாரி ஆடிய கூத்து குறித்து ஐ.நா பாதுகாப்பு சபை மேலும் சில இறுக்கமான முடிவை எடுத்துள்ளது. தனது ஆறு அம்சக் கோரிக்கையுடன் மேலும் ஒரு கோரிக்கையை இணைப்பதற்காக கொபி அனான் சிரியா புறப்பட்டுள்ளார். நாளை செவ்வாய் பேச்சுக்களை நடாத்த இருக்கிறார்.
சிரியாவிற்கு எதிராக பாதுகாப்பு சபையில் தீர்மானங்கள் போடுவதில் யாதொரு பயனும் கிடையாது. ஐ.நாவையும் அதன் பாதுகாப்பு சபையையும் ஒரு கூத்தாடிகள் என்று சிரிய அதிபர் தெரிவித்துள்ளார். கண்காணிப்பு குழு உட்பட ஐ.நாவை அவர்கள் கடுகளவும் மதிக்கவில்லை. ரஸ்யாவும் சிரியாவில் நடந்தவைகளை விசாரிக்க வேண்டுமென கூறி நழுவியுள்ளது.
சிரியாவின் ஹவுலா நகரில் கடந்த வெள்ளிக்கிழமையின்று நடந்த தாக்குதலில், நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 34 குழந்தைகள் உள்ளிட்ட 108 பேர் பலியாகினர். இப்படுகொலைக்கு அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சிரியாவில், அதிபர் பஷார்-அல்-ஆசாத்தின் ஆட்சியை எதிர்த்து, கிளர்ச்சியாளர்கள் கடந்த 14 மாதங்களாக போராடி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.
முன்னதாக ஐ.நா சபை மற்றும் அரபு நாடுகளின் சிறப்பு பிரதிநிதியான ஐ.நா.வின் முன்னாள் பொது செயலர் கோபி அனான் தலைமையிலான தூதுக் குழு, இருதரப்புக்கும் இடையே அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தியது.
இரு தரப்பினரும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, சிரியாவில், நேற்று முன்தினம் ஹவுலா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில், 108 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு தாங்கள் காரணமல்ல என, சிரியா வெளியுறவுத் துறை தகவல் தொடர்பாளர் ஜிகாத்-அல்-மக்திசி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இருதரப்பினருக்குமிடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா.வின் தூதுக்குழு தலைவரான கோபி அனான் இன்று சிரியா தலைநகரான டமாஸ்கஸிற்கு சென்றார்.
சிரியா அதிபர் ஆசாத்தை சந்திப்பதற்கு முன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ஹவுலாவில் நடத்தப்பட்ட படுகொலையில் 108 கொல்லபட்டுள்ளனர். இந்த கொடூரமான செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இத்தாக்குதலுக்கு யார் காரணமாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்களது வன்முறைப் பாதையை விட்டொழிக்க வேண்டும். கடும் நெருக்கடியான சூழலில் நான் இந்நாட்டிற்கு வந்துள்ளேன். இங்குள்ள ஒவ்வொருவரும் தங்கள் கையிலுள்ள ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்றார்.
0 Responses to அனான் அவசரமாக சிரியா புறப்பட்டார்