Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கேரள மாநிலத்தில் பள்ளி ஆசிரியைகள் பள்ளிக்கு சுடிதார், சல்வார் போன்ற மாடர்ன் டிரஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியை என்றாலே ஒரு அடையாளம் இருக்கும். காட்டன் சேலை, கொண்டை, கண்ணாடி, கலர் குடை, என ஆசிரியைகளுக்கு தனி அடையாளத்தையே ஏற்படுத்தியவர் பாரதிராஜா. 2000 ஆண்டு பிறக்கும் முன்பு வரை அனைத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியைகளும் அந்த மாதிரிதான் இருந்தனர். அதனால் மாணவர்களுக்கும் ஆசிரியைமேல் ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. இன்றைக்கு பணிக்கு வரும் பெரும்பாலான ஆசிரியைகள் புடவை அணிந்து வந்தாலும் ஸ்பெசல் கிளாஸ் போன்ற நாட்களில் சுடிதார் அணிந்து வருகின்றனர். இதனால் வயது வித்தியாசம் அதிகம் தெரிவதில்லை. இதனால் ஆசிரியை, மாணவர்களிடையேயான இடைவெளியும் குறைந்து தேவையற்ற சிக்கல்கள் எழுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு கேரளாவில் ஆசிரியைகள் பள்ளிக்கு நவீன ஆடைகள் உடுத்தி வரக்கூடாது. சேலை அணிந்துதான் வரவேண்டும் என ஆசிரியைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இதனை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியை மாணவிகளுக்கு இடையே வித்தி யாசத்தை ஏற்படுத்தவும், குழப்பத்தை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அரசின் இந்த உத்தரவு ஆசிரியைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆடை அணிவது எங்கள் சுதந்திரம் அதில் தலையிடுவது எங்களின் சுதந்திரத்தில் தலையிடுவது போல உள்ளதாக கூறியுள்ளனர். மாடர்ன் உடைகள் என்பது வசதியானது. இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது சவுகரியமாக இருக்கும் என்றும் பெரும்பாலான ஆசியர்கள் கூறியுள்ளனர்.

0 Responses to கேரளாவில் ஆசிரியைகள் மாடர்ன் உடைகள் அணிய தடை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com